எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
முதலாவது பெண்கள் பிரிமீயர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள 2 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் ஆடி வருகின்றன. நேற்று 2 ஆட்டங்கள் நடைபெற்றன. முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களே எடுத்தது. 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. அணி களம் புகுந்தது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உ.பி. தக்கவைத்து கொண்டது. அதேவேளையில் தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக வலம் வந்த மும்பை சந்தித்த முதல் தோல்வி இது ஆகும்.
____________________
இந்திய கிரிக்கெட் வீரர்களை சந்தித்து பேசிய நடிகர் ரஜினி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கலேவின் அழைப்பை ஏற்று இந்தப் போட்டியை நேரில் காண நடிகர் ரஜினிகாந்த் மும்பை வந்திருந்தார். அமோல் கலேவுடன் இணைந்து இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில், நேற்று நடிகர் ரஜினிகாந்த் இந்திய அணி வீரர்களான குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள குல்தீப் யாதவ், “ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்” என கேப்ஷனிட்டுள்ளார். தொடர்ந்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரேவையும் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
________________
சிறப்பான ஆட்டம்: ராகுலுக்கு வெங்கடேஷ் பிரசாத் பாராட்டு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெற செய்தார் இந்திய வீரர் கே.எல்.ராகுல். அவரது இந்த மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பாராட்டியுள்ளார். இந்தப் போட்டிக்கு முன்னதாக கே.எல்.ராகுல் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறினார். அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஆடும் லெவனில் தனது இடத்தை அவர் இழந்திருந்தார்.
இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 91 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி இருந்தார் ராகுல். “ஆட்டத்தில் அழுத்தம் அதிகம் நிறைந்திருந்த சூழலில் அற்புதமான இன்னிங்ஸ் ஆடி அசத்தினார் ராகுல். அவரது தரமான ஆட்டம் இது. அவருக்கு துணையாக களத்தில் பேட் செய்தார் ஜடேஜா. இந்திய அணியின் சிறப்பான வெற்றி இது” என வெங்கடேஷ் பிரசாத் ட்வீட் செய்துள்ளார்.
________________
நாட்டு நாட்டு பாடலுக்கு ... வைப் செய்த விராட் கோலி
ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருது வென்றது. இந்தப் பாடலின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலை எழுதிய பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆஸ்கர் விருதை பெற்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பீல்டிங் செய்தபோது விராட் கோலி, 'நாட்டு நாட்டு' பாடலின் நடன அசைவுகளை போட்டிருந்தார். ஸ்லிப் ஃபீல்டராக அவர் நின்றபோது இந்தப் பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 75 ரன்கள் எடுத்திருந்தார். ஜடேஜா 45 ரன்களும், கேப்டன் பாண்டியா 25 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.
________________
சிஎஸ்கே.வின் அடுத்த கேப்டன் கெய்க்வாட்: ரெய்னா நம்பிக்கை
41 வயதாகும் டோனி இந்த ஐபிஎல் தொடருடன் பெரும்பாலும் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆண்டு சிஎஸ்கே விளையாடப்போகும் கடைசி போட்டிக்கு முன்பாக இந்த அறிவிப்பை டோனி வெளியிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதேநேரத்தில் அவருக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு யார் கேப்டன் பொறுப்பை ஏற்பார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா இளம் வீரரின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:- டோனிக்குப் பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் ஏற்பார் என நம்புகிறேன். அவர் சிஎஸ்கே மற்றும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி இருக்கிறார். இளம் வீரர் என்பதால் அவருக்கு சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம். ருதுராஜ் உங்களின் சிஎஸ்கே கேப்டன் பொறுப்புக்கு என்னுயை வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 11 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தங்கம் விலை மேலும் சரிவு
16 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-07-2025.
16 Jul 2025 -
விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிக்கும் 'தலைவன் தலைவி'
16 Jul 2025சத்யஜோதி பிலிம்ஸ் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்திருக்கும்
-
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் வெளியீடு
16 Jul 2025மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
ஆகஸ்ட் 25-ல் மதுரையில் நடைபெறுகிறது: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு
16 Jul 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என அக்கட்சியின் தலைவர் வ
-
டிஜே அருணாச்சலம் நடிக்கும் உசுரே
16 Jul 2025ஸ்ரீகிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் உசுரே படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
-
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முதல்வர் பினராயி கேரளா திரும்பினார்
16 Jul 2025திருவனந்தபுரம் : அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கேரளா முதல்வர்பினராய் விஜயன் திரும்பினார்.
-
ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனா, பிரேசிலுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை
16 Jul 2025வாஷிங்டன், பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் ம
-
பாட்னா ஏர்போர்ட்டில் பரபரப்பு: நொடி பொழுதில் விபத்தில் இருந்து தப்பிய விமானம்
16 Jul 2025பாட்னா : பாட்னாவில் விபத்தில் இருந்து தப்பிய இண்டிகோ விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்த மூதாட்டி..!
16 Jul 2025பீஜிங், சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி ஒருவர் ஆன்லைனில் மூலம் ரூ.2.4 கோடிக்கு ஷாப்பிங் செய்தார்.
-
சென்னை, தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
16 Jul 2025சென்னை, தமிழகத்தில் சென்னை,நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவம்: சுபான்ஷு சுக்லா பதிவு
16 Jul 2025வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, என் மீதும், என் பண
-
டிராகன் நூறாவது நாள் வெற்றி விழா
16 Jul 2025ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், நடிப்பில் வெளியான படம் டிராகன் திரைப்படம் நூறாவது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
-
மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்பு: ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் கமல்ஹாசன்
16 Jul 2025சென்னை, மாநிலங்களவை எம்.பியாக வரும் 25-ம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழை சக நடிகரும், தனது நண்பருமான ரஜினிகாந்திடம்
-
கூட்டணியைப் பொருத்தவரை நான் சொல்வதே இறுதியானது: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
16 Jul 2025சிதம்பரம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை. எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் சொன்னார்.
-
ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
16 Jul 2025தெஹ்ரான் : அத்தியாவசியமற்ற ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
-
உருட்டு உருட்டு' பட இசை வெளியீட்டு விழா
16 Jul 2025ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ், சாய் காவியா மற்றும் சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் உருட
-
AI தொழில்நுட்பத்தில் பன் பட்டர் ஜாம்
16 Jul 2025பன் பட்டர் ஜாம் படத்தின் Veo3 AI எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார். Veo3 AI என்பது, இயற்கையான தோற்றம் மற்றும் சினிமா தரம் கொண்ட வீடியோக்களை உருவாக்க
-
ஜென்ம நட்சத்திரம் இசை வெளியீட்டு விழா
16 Jul 2025அமோகம் ஸ்டுடியோஸ் விஜயன் தயாரிப்பில் மணிவர்மன் இயக்கத்தில் தமன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’ஜென்ம நட்சத்திரம்.
-
வள்ளிமலை வேலன் இசை வெளியீட்டு விழா
16 Jul 2025எம் என் ஆர் பிக்சர்ஸ், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்.
-
துருவ் சர்ஜா நடிக்கும் 'கே.டி-தி டெவில்'
16 Jul 2025துருவ் சர்ஜா நடிப்பில் இயக்குநர் பிரேம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கே.டி.
-
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தல்
16 Jul 2025சென்னை : குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
ஐ.நா., பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்; நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்
16 Jul 2025நியூயார்க் : ஐ.நா., படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா.,வில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ்
-
'ஃப்ரீடம்' திரைவிமர்சனம்
16 Jul 2025சசிகுமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் 1991 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்துக்கு வருகிறார்கள். அவர்கள் ராமேஸ்வரம் முகாமில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
-
மீனாட்சி ஆனந்த் தயாரிக்கும் 'டிரெண்டிங்'
16 Jul 2025ராம் ஃபிலிம் பேக்டரி சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், சிவராஜ் இயக்கத்தில், கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’டிரெண்டிங்’.