முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்துக்கு மேலும் 5 துணை முதல்வர்கள்? - காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகவல்

சனிக்கிழமை, 23 செப்டம்பர் 2023      இந்தியா
Congress 2023 01 25

Source: provided

பெங்களூர் : கர்நாடகத்துக்கு மேலும் 5 துணை முதல்வர்களை நியமிக்க மாநில அரசு ஆலோசித்து வருவதாக காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜ் ராயரெட்டி தெரிவித்துள்ளார். 

கர்நாடகத்தில் நடப்பாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் உள்ளனர்.  இந்நிலையில் கர்நாடக மாநில அரசுக்கு மொத்தம் 6 துணை முதல்வர்களை நியமிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதற்கு மாநில அமைச்சர்கள் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பசவராஜ் ராயரெட்டி தகவல் தெரிவித்துள்ளார். 

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மேலும் 5 துணை முதல்வர்களை நியமிக்க மாநில அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறந்த நிர்வாகத்திற்காக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என்.ராஜண்ணா இந்த யோசனையை முன்வைத்ததாகவும் இதற்கு சக அமைச்சர்கள் பலரும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா கூறியுள்ளார். 

தற்போது அதிகபட்சமாக ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசில் 5 துணை முதல்வர்கள் உள்ளனர். உத்தரபிரதேசம், நாகாலாந்து,மேகாலயம், மகராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இரண்டு துணை முதல்வர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து