Idhayam Matrimony

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தலைவர்கள் முதிர்ச்சியை வெளிப்படுத்தினர்: கிரண் ரிஜிஜு

வியாழக்கிழமை, 8 மே 2025      இந்தியா
Kiran-Rijiju 2023-01-16

Source: provided

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், உள் துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் எம்பி சந்தீப் பந்தோபாத்யாய, திமுக எம்பி டி.ஆர்.பாலு, சமாஜ்வாதி கட்சி எம்பி ராம் கோபால் யாதவ், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், சிவ சேனா(யுபிடி) எம்பி சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ்(எஸ்பி) எம்பி சுப்ரியா சுலே, பிஜூ ஜனதா தள எம்பி சஸ்மித் பத்ரா, சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ், ஐக்கிய ஜனதா தள எம்பி சஞ்சய் ஜா, ஏஐஎம்ஐஎம் எம்பி அசாதுதின் ஒவைசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய கிரண் ரிஜிஜு, “கூட்டத்தின் தொடக்கத்தில் சிந்தூர் நடவடிக்கை மற்றும் அரசாங்கத்தின் நோக்கம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். நாடு ஒரு முக்கியமான காலகட்டத்தில் சென்று கொண்டிருக்கும் போது அனைத்து அரசியல் தலைவர்களும் முதிர்ச்சியைக் காட்டினர். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்க உறுதிபூண்டுள்ளன. எம்.பி.க்களிடமிருந்து சில ஆலோசனைகள் வந்தன.” என தெரிவித்தார். அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "நாங்கள் அரசாங்கத்திற்கு எங்கள் முழு ஆதரவையும் அளித்துள்ளோம். மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் கூறியது போல், நாங்கள் விவாதிக்க விரும்பாத சில விஷயங்கள் இருப்பதாக அவர்கள் (அரசாங்கம்) கூறினர்" என்றார். 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்த சில தினங்களில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மீது அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் நேற்று மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து