எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னையில் நேற்று (மே.8) தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130-க்கு விற்பனையானது.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 14-ம் தேதி ஒரு பவுன் ரூ.69,760-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (மே.7) ஒரே நாளில் 2 முறை அதிகரித்து ‘ஷாக்’ கொடுத்தது. அதன்படி, நேற்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.125 அதிகரித்து ரூ.9,025-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து ரூ.72,200-க்கும் விற்பனையானது. பின்னர், மதியம் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராம் ரூ.75 அதிகரித்து ரூ.9,100-க்கும், ஒரு பவுன் ரூ.600 அதிகரித்து ரூ.72,800-க்கும் விற்பனையானது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,600 அதிகரித்தது.
தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ஒரு பவுன் ரூ.73,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.110-க்கும், கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


