முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: தனஞ்ஜெயா முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024      விளையாட்டு
Dhananjaya 2024-03-29

Source: provided

துபாய் : ஐ.சி.சி. டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையில் தனஞ்ஜெயா டி சில்வா 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆட்டநாயகன்... 

வங்கதேசத்துக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்து அசத்தினார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனஞ்ஜெயா டி சில்வா ஆட்டநாயகன் விருதினை வென்றார். இந்த நிலையில், ஐ.சி.சி. டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தனஞ்ஜெயா டி சில்வா 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

முதல் 3 இடங்கள்...

ஐ.சி.சி. டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையில் டி சில்வா 15 இடங்கள் முன்னேறி 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 695 ரேட்டிங் புள்ளிகளுடன் 14-வது இடத்தில் இருக்கும் அவர், முதல் 10 இடங்களுக்குள் முன்னேறுவதற்கு இன்னும் 40 ரேட்டிங் புள்ளிகளே தேவைப்படுகின்றன. ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் கேன் வில்லியம்சன், ஜோ ரூட் மற்றும் பாபர் அசாம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து