எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
தங்கத்தின் விலை ஏறியும், இறங்கியும் வருவது வழக்கம். இதற்கிடையே கடந்த மாதத்தில் இருந்து தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55,000 கடந்தது. தொடர்ந்து அதிகரித்து வரும் விலை, நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1.160 குறைந்து ரூ.53,600-க்கு விற்பனையானது. தங்கம் கிராமுக்கு ரூ.145 குறைந்து ரூ. 6,700-க்கு விற்பனையானது.
கடந்த மாதம் தொடக்கம் முதல் உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,160 குறைந்தது மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்திய நிலையில், நேற்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.53,840-க்கு விற்பனையானது. தங்கம் கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.6.730-க்கு விற்பனையானது.வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.86.50-க்கு விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025