முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024      விளையாட்டு
Rajasthan-team 2024-03-29

Source: provided

ஜெய்ப்பூர் : டெல்லி அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் அணி தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

10 அணிகள்...

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

185 ரன்கள்....

இதையடுத்து, டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே

2-வது வெற்றி...

அடித்தது. இதன் மூலம் டெல்லி அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் திரில் வெற்றியை பதிவு செய்தது.டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக வார்னர் 49 ரன்களும், ஸ்டப்ஸ் 44 ரன்களும் அடித்தனர். நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி உள்ள ராஜஸ்தான் அணி இரண்டிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து புள்ளிபட்டியலில் 2-வது இடத்தை ராஜஸ்தான் அணி பிடித்துள்ளது.

விக்கெட்டுகளை... 

தோல்வி குறித்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது, நிச்சயம் ஏமாற்றம்தான். இதிலிருந்து நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயம், அதிலிருந்து கற்றுக்கொள்வதுதான். பந்து வீச்சாளர்கள் 15-16 ஓவர்கள் வரை நன்றாகச் செயல்பட்டனர். பேட்ஸ்மேன்கள் சில சமயங்களில் இறுதி வரை சென்று விரைவாக ஸ்கோரை அடிப்பார்கள். அது இந்த ஆட்டத்தில் நடந்தது. மார்ஷ் மற்றும் வார்னர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் நாங்கள் மிடில் ஓவர்களில் சில விக்கெட்டுகளை இழந்தோம். நோர்ட்ஜே இறுதிக்கட்டத்தில் பந்து வீச வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஆனால் அவ்வாறு பந்துவீசும் போது சில சமயங்களில் நீங்கள் அதிக ரன்களுக்கு செல்லலாம். அடுத்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

வைரலாகும் 'ரிவ்யூ'

முன்னதாக இந்த போட்டியின் போது குல்தீப் யாதவ் ஓவரில் பட்லர் எல்பிடபிள்யூ ஆனார். அதற்கு களநடுவர் அவுட் இல்லை என தெரிவித்தார். இதனை பார்த்த கேப்டன் ரிஷப் யோசித்துக் கொண்டே வந்தார். பந்து வீசிய குல்தீப் யாதவ் வேகமாக ரிஷப் பண்டை நோக்கி வந்து ரிவ்யூ எடுங்கள் என கூறியது மட்டுமல்லாமல் அவரது கையை பிடித்து ரிவ்யூ சைகையை காட்டுவார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து