முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். குறித்து அஸ்வின் ஆச்சர்யம்

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024      விளையாட்டு
Ashwin 1

Source: provided

சில நேரங்களில் ஐ.பி.எல் என்பது கிரிக்கெட்டா என்ற கேள்வி தமக்கு வரும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ஏனெனில் ஐ.பி.எல் தொடரில் கிரிக்கெட்டுக்கு நிகராக விளம்பரங்களில் நடிப்பது, அதற்காக நீண்ட பயிற்சிகளை எடுப்பது போன்ற அம்சங்களும் பின்புலத்தில் நடக்கும் என்று அஸ்வின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஒரு வீரராக ஐ.பி.எல் தொடருக்கு வந்த போது நான் நட்சத்திர வீரர்களிடமிருந்து தேவையான விஷயங்களை கற்றுக்கொள்ள பார்த்தேன். அதனால் 10 வருடங்கள் கழித்து ஐ.பி.எல் எப்படி இருக்கும் என்று நான் எப்போதும் நினைத்து பார்த்ததில்லை. 

கடந்த பல சீசன்களாக விளையாடி வரும் நான் ஐ.பி.எல் என்பது மிகப்பெரியது என்று சொல்வேன். சில நேரங்களில் ஐ.பி.எல் என்பது கிரிக்கெட்டா என்ற ஆச்சரியமும் எனக்கு ஏற்படும். ஏனெனில் அதன் பின்புலத்தில் நிறைய விஷயங்கள் நடைபெறும். நாங்கள் விளம்பரங்களில் நடிப்பதற்காக பயிற்சிகளை எடுப்போம். இந்தளவுக்கு ஐ.பி.எல் வளரும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். சி.எஸ்.கே அணியில் ஆரம்ப காலத்தில் விளையாடிய போது ஸ்காட் ஸ்டைரிஸிடம் பேசியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஆரம்ப சீசன்களில் டெக்கான் சார்ஜஸ் அணிக்காக விளையாடிய அவர் ஐ.பி.எல் 2 - 3 வருடங்களை தாண்டி நடக்காது என்று நினைத்ததாக என்னிடம் சொன்னார். இவ்வாறு அவர் கூறினார்.

________________________________________________________

ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப்-32 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் ஜப்பானின் கூ தகாஹாஷி உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீகாந்த் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 18-21, 15-21 என்ற செட் கணக்கில் கூ டகாஹஷியிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

________________________________________________________

பிரித்வி ஷா குறித்து கங்குலி விளக்கம்

டெல்லி அணியில் கடந்த ஐ.பி.எல். சீசனில் வார்னருடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய பிரித்வி ஷா நடப்பு தொடரில் டெல்லி ஆடியுள்ள 2 ஆட்டங்களிலும் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. இதையடுத்து டெல்லி அணியில் பிரித்வி ஷா ஏன் இடம்பெறவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக டெல்லி அணியின் இயக்குனர் சவுரவ் கங்குலி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது,

பிரித்வி ஷா ஒரு தொடக்க ஆட்டக்காரர். நாங்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் ஜோடியை தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறக்க முடிவு செய்தோம். ரிக்கி புய் ஒரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். இது ஒரு வித்தியாசமான தொடக்க ஜோடி. வார்னர் மற்றும் மார்ஷ் ஆஸ்திரேலியாவுக்காக தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி உள்ளனர். அவர்கள் அதில் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர். எனவே நாங்கள் பிரித்வி ஷாவை வெளியே வைத்துவிட்டு வார்னர் மற்றும் மார்ஷ் ஜோடியை தொடக்க ஆட்டக்காரர்களாக ஆட வைக்க முடிவு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து