முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிகில் படக்கதை விவகாரம்: இயக்குநர் அட்லீ பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2024      சினிமா
chennai-high-court 2022-08-29

சென்னை, பிகில் படக்கதை விவகாரம் தொடர்பாக இயக்குநர் அட்லீ பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான படம் பிகில். இதனை இயக்குநர் அட்லீ இயக்கி இருந்தார். இந்தப் படம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. பிகில் படத்தின் கதைக்கு உரிமை கோரி சென்னை சூளைமேட்டை சேர்ந்த அம்ஜத் மீரான் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

பிகில் படத்தின் கதையை தன்னுடையது என்றும், தனது கதையை பயன்படுத்தியதற்காக 10 லட்ச ரூபாய் வழங்க இயக்குனர் அட்லீ, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டுமென வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் விஜய் நடித்த பிகில் படக்கதை  தொடர்பான வழக்கில் இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் அர்ச்சனா பதில் அளிக்க உத்தரவிட்டனர். நடிகர் விஜய் நடித்த பிகில் படம் தனது கதை என அம்ஜத் மீரான் 2019-ல் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து