எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கதையின் நாயகனாக தர்ஷன் நடிக்கும் படம் ஹவுஸ் மேட்ஸ், இவர் ஏற்கனவே கனா, தும்பா போன்ற படங்களில் நடித்திருக்கிறார், மேலும், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். T. ராஜவேல் இயக்கியிருக்கும் இப்படத்தை PLAYSMITH STUDIOS சார்பில் S.விஜய பிரகாஷ் தயாரித்து உள்ளார் .இவருடன் இணைந்து SOUTH STUDIOS - இயக்குனர் S.P.சக்திவேல் படைப்பு தயாரிப்பாளராக களம் கண்டுள்ளார். M.S.சதீஷ் ஒளிப்பதிவை கவனிக்க, ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார் ஒரு அபார்ட்மெண்டை சுற்றிலும் நடக்கும் சம்பவங்களை மையக்கருவாக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஃபேண்டஸி, ஹாரர் காமெடி என அனைவரும் ரசிக்கும் வகையில் படம் உருவாகி இருப்பாதாக அறிவித்துள்ள படக்குழு கோடை விடுமுறையில் படம் திரைக்கு வரும் என தெரிவித்துள்ளது
அனைத்து தரப்பும் ரசிக்கும் படியான புதிய ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ் “
உலகம் முழுவதும் ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படங்களுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பி திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் விசிட் அடிப்பது வழக்கம். அதற்கு கடந்த சில வருடங்களில் வந்து வெற்றி பெற்ற படங்களை நாம் வரிசையாக கூறலாம் , அவ்வரிசையில் இப்போது முற்றிலும் புதிய களத்துடன் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ்” (HOUSE MATES).
இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக தர்ஷன் நடிக்கிறார் , இவர் ஏற்கனவே கனா , தும்பா போன்ற படங்களில் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்தவர் . விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பெரும்பான்மையாக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது . இவருடன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட் அவர்களும் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
இத்திரைப்படத்தை T. ராஜவேல் எழுதி , இயக்கி இருக்கிறார். இவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்களிடம் இணை இயக்குனர் ஆகவும் , சமீபத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற “DEMONTE COLONY 2 “ படத்தின் எழுத்தாளர் குழுவில் பணியாற்றி இருந்தார் என்பதும் குறிப்படத்தக்கது . இத்திரைப்படத்தை PLAYSMITH STUDIOS நிறுவனம் சார்பில் S.விஜய பிரகாஷ் அவர்கள் தயாரித்து உள்ளார் .இவருடன் இணைந்து இயக்குனர் S.P.சக்திவேல் (SOUTH STUDIOS ) அவர்கள் படைப்பு தயாரிப்பாளராக களம் கண்டுள்ளார். M.S.சதீஷ் அவர்கள் ஒளிப்பதிவு இயக்குனராக பணியாற்றிஉள்ளார் . நேரம் , பிரேமம் படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார் .
படத்தின் மையக்கரு ஒரு அபார்ட்மெண்டை சுற்றிலும் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாகவும் , மிடில் கிளாஸ் குடும்பங்களின் அன்றாட உணர்வுகளை பிரதி பலிக்கும் வகையிலும் , *படம் முழுக்க முழுக்க ஃபேண்டஸி, ஹாரர் என அனைவரும் விரும்பி பார்க்கும் வகையிலும் , குடும்பமாக சென்று ரசிக்கும் வகையிலும் *படமாக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன .கோடை விடுமுறையில் படம் திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
31 Oct 2025மெல்போர்ன் : 2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
-
சென்னை-குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்
31 Oct 2025சென்னை, சென்னை - குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை: மதுரை ஐகோர்ட்
31 Oct 2025மதுரை, கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்று மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
-
பா.ம.க. உட்கட்சி பிரச்சினை: 6 மாதங்களில் சுமுக தீர்வு; அன்புமணி உறுதி
31 Oct 2025சேலம் : பா.ம.க. உட்கட்சி பிரச்சினைக்கு 6 மாதத்தில் சுமுக தீர்வு ஏற்படும் என்று அன்புமணி= கூறினார்.
-
வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
31 Oct 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
31 Oct 2025சென்னை : ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு ஏற்படுவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து
31 Oct 2025சென்னை : ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து செய்யப்பட்டது.
-
இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து
31 Oct 2025தமிழ்நாட்டின் 35 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள ஏ.ஆர். இளம்பரிதிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கோவையில் அமையும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
31 Oct 2025கோவை : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு.
-
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
31 Oct 2025சென்னை : வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை
31 Oct 2025சென்னை : திருமண புகார் வழக்கு நடந்துவரக்கூடியநிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
ரூ. 1.86 லட்சத்திற்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி
31 Oct 2025பெங்களூரு : ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
-
த.வெ.க. கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவத்தை பார்த்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
31 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
-
இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா, கார்கே, ராகுல் அஞ்சலி
31 Oct 2025புதுடெல்லி : இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் சோனியா, கார்கே, ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர்.
-
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான 'ஆன்லைன்' முன்பதிவு இன்று தொடங்குகிறது
31 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டது.
-
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் : ராஜ்நாத் சிங் கையெழுத்து
31 Oct 2025டெல்லி : இந்தியா- அமெரிக்கா இடையே 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ராஜ்நாத் சிங் கையெழுத்திட்டார்.
-
முழு காஷ்மீரும் இந்தியாவுடன் ஒருங்கிணைவதை நேரு அனுமதிக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு
31 Oct 2025அகமதாபாத் : முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார் படேல், ஆனால் நேரு அனுமதிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது
31 Oct 2025தூத்துக்குடி : இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பிரதமர் மோடி பொய் பிரசாரம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
31 Oct 2025சென்னை : பீகாரிகள் பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்வதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்றும் அவர
-
சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்: பிரதமர் நரேந்திர மோடி மரியாதை
31 Oct 2025காந்தி நகர் : சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் கெவாடியா பகுதியில் உள்ள வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை
-
பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : தமிழக காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்
31 Oct 2025சென்னை : பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்யின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்க
-
தமிழகத்தில் பீகார் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை : வி.சி.க. தலைவர் திருமாவளவன்
31 Oct 2025சென்னை : பீகார் மக்களுக்கு தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று திருமாவளவன் கூறினார்.
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் - செங்கோட்டையன்
31 Oct 2025கமுதி : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
-
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும்: கார்கே
31 Oct 2025புதுடெல்லி : ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
-
சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு: தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
31 Oct 2025சென்னை : சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.


