முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.ஐ.டி. மாணவிக்கு பாலியல் தொல்லை: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

சனிக்கிழமை, 28 ஜூன் 2025      தமிழகம்
IIT 2023 03 14

சென்னை, சென்னையில் ஐ.ஐ.டி.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் கடந்த 25ம் தேதி மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி வேறு கல்லூரியில் படித்து வந்துள்ளார். ஐ.ஐ.டி.யில் படித்து வரும் தனது தோழியை பார்க்க வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள உணவகத்தில் ஊழியராக பணியாற்றி வந்த வடமாநில இளைஞர் ரோஷன் என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வடமாநில இளைஞனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஐ.ஐ.டி.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. மேலும், இந்த வழக்கை நேர்மையாக குறித்த காலத்திற்குள் விசாரித்து முடிவுக்கவும் தமிழக டி.ஜி.பி.க்கு மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து