முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல்

சனிக்கிழமை, 28 ஜூன் 2025      இந்தியா
Election 2023-11-07

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் தேர்தலுக்கு இன்று காலை 10 முதல் 12 மணிக்குள் வேட்பு மனுதாக்கல் நடைபெற இருக்கிறது. ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்காக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு மாநில தலைவர்கள், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். யூனியன் பிரதேசமான புதுவையில் பா.ஜ.க. தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கான தேர்தல் ஜூன் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது. மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை மனுக்களை திரும்பப்பெறலாம். இதற்கான அறிவிப்பை தேர்தல் நடத்தும் அதிகாரி அகிலன் வெளியிட்டுள்ளார். 

அநேகமாக ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்வார். அவரையே இன்று ஏகமனதாக மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் தருண்சுக் அறிவிக்க உள்ளார். புதிய மாநிலதலைவராக வி.பி.ராமலிங்கம் தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது. இவர் நியமன எம்எல்ஏவாக இருந்து தனது பதவியை நேற்று முன்தினம் ராஜிநாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து