முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உலகின் 100 % காகிதமில்லாத டிஜிட்டல் அரசாக துபாய் மாற்றம்

Image Unavailable

உலகில் 100 சதவீதம் காகிதமில்லாத டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதல் அரசாக துபாய் மாறி உள்ளது என அதன் இளவரசர் அறிவித்துள்ளார். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் அதன் பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தன் பின் முகமது பின் ரஷித் அல் மக்தோம், நவீன தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்நிலையில் துபாய் அரசு துறைகளில் காகித பயன்பாட்டிற்கு முடிவு கட்டும் வகையில் அதிரடி நடவடிக்கை ஒன்றை அவர் தற்போது எடுத்துள்ளார். இதுகுறித்து பட்டத்து இளவரசர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: துபாய் அரசின்கீழ் உள்ள 45 துறைகளும் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன. இனி இந்த துறைகளில் காகிதங்கள் பயன்படுத்தப்படாது. இதனால் ஒரு ஆண்டுக்கு 2,650 கோடி ரூபாய் வரை அரசுக்கு மிச்சமாகும். இந்த நடவடிக்கையால் 100 சதவீதம் காகிதமில்லாத டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதல் அரசு என்ற பெருமையை துபாய் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் காகிதமில்லா அரசாங்கத்தை கட்டமைக்க, திட்டங்களை வகுத்து வந்தாலும் பல்வேறு காரணங்களால் அதை செயல்படுத்த முடியாமல் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்