ஆண்டிபட்டியில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை முடக்க நினைக்கும் தி.மு.க. அரசு

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      அரசியல்

 

பேரையூர், பிப்.18-

ஆண்டிபட்டி கூட்டுகுடிநீர் திட்டம் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டம் இந்த திட்டத்தால் பேரையூர் கல்லுப்பட்டி, கள்ளிக்குடி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தை முடக்குவதற்கு தி.மு.க. அரசு முயற்சித்து வருகிறது. 

ஆண்டிபட்டி கூட்டுகுடிநீர் திட்டத்தால் இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனை முற்றிலுமாக தீர்க்கப்பட்டது. ஆனால் கோடைகாலத்திலும் கூட தினமும் வந்த தண்ணீர் இப்பொழுது போதிய நீர் பிடிப்பு இருந்தும் 2 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் தற்போது 4 நான்கு நாளைக்கு ஒரு முறை விடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர்பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இத்திட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து முடுவதும் முடக்குவதற்கு தி.மு.க அரசு முயற்சித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: