முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா ஒவ்வொரு குடும்பத்துக்கும் தாயாக விளங்குகிறார்

சனிக்கிழமை, 16 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

தாம்பரம், ஜூன்.17 - தமிழகத்துக்கு முதல்வராக மட்டுமல்ல  ஒவ்வொரு குடும்பத்துக்கும் தாயாக விளங்கிவருகிறார் ஜெயலலிதா என்று தாம்பரம் சேவாசதன் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கனிணி வழங்க அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா பேசினார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சேவா சதன் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா  சிறப்புத் திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு தாம்பரம் நகரமன்ற தலைவரும், நகர செயலாளருமான ம.கரிகாலன் தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான எம்.நாகூர்கனி முன்னிலை வகித்தார்.

விழாவில் மாணவ- மாணவிகளுக்கு மடிக்கனிணிகளை வழங்கி கால்நடைத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பேசியதாவது:-

மாணவ சமுதாயத்திற்கு இந்தியாவில் வேறு எந்த மாநில முதல்-அமைச்சருக்கும் இல்லாத சிந்தனையோடு, பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருபவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா அந்த அடிப்படையில்தான் இந்த பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஒரு காலத்தில் வசதி படைத்தவர்கள் வீட்டில் மட்டும்தான் சைக்கிள் இருக்கும். ஆனால் அந்த சைக்கிளை படிக்கிற அனைது மாணவக் கண்மணிகளுக்கும் கொடுத்து மகிழந்தவர் முதல்வர் அதை பார்த்துதான் மற்ற சில மாநிலங்களும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த  தற்போது முயன்று வருகின்றனர். அதேபோல சில ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்தால் பழைய புத்தகங்களை இலவசமாகவோ அல்லது குறைந்த விலை கொடுத்தோ வாங்கி மாணவர்கள் படிப்பதுண்டு. புதுப் புத்தங்கள் நோட்டுகளை வாங்குவதற்கு கூட மாணவ்கள் மிகவும் சிரமப்படுவார்கள். அது பெற்றோர்களுக்கு பெரிய சுமையாகவே தெரியும்.

ஆனால் ஜெயலலிதா முதலமைச்சராக வந்தவுடன் புதிய புத்தகங்களும், கல்வி கற்க தேவையான நோட்டு புத்தகங்களும், வண்ண பென்சில்களும், ஜாமெண்ட்ரி பாக்ஸ் போன்றவைகளை யெல்லாம் அரசாங்கமே வழங்கிட ஏற்பாடு செய்தார். அதேபோல் கல்வி கற்க செல்லும் மாணவ சமுதாயத்திற்கு விலையில்லா  காலணிகளும், மாணவிகளுக்கு சல்வார் கமீஸ் மற்றும மாணவர்களுக்கு முழுக்கால் பேண்ட் மற்றும் சட்டையும் வழங்கி கல்வி கற்கிற ஒரு வேலையை மட்டுமே மாணவ சமுயதாயத்திற்கு வழங்கி வருபவர்தான் நம்முடைய ஜெயலலிதா இதனை மாணவ சமுதாயத்தினர் நன்கு அறிவார்கள்.

தனி மனித ஒழுக்கமும் மற்றும் முதல்வர் ஒழுங்கான நெறிமுறைகளும் இருக்க  வேண்டுமென்று விரும்புவர் முதல்வர் அதனால்தான் எந்த கட்சியிலும் இல்லாத  வண்ணம் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள், மாணவிகள்  லட்சக்கணக்கில் கழகத்தில் இன்றைக்கு இணைந்து வருகிறார்கள்.

பேரறிஞர் அண்ணா தனது  அறிவாற்றலால் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சப்பெலோசிப் பட்டம் பெற்றார். தமிழகத்தைச் சேர்ந்தவர் முதன் முதலாக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றது அண்ணாதான். அவர் வழிவந்த முதல்வர் அறிவாற்றலிலும், சிந்திக்கும் திறனிலும், பன்மொழி வித்தகராக விளங்குவதிலும் அண்ணாவை விஞ்சியவராக விளங்குகிறார்.

அதனால்தான் அமெரிக்க நாட்டிற்கு சென்று அண்ணா பெற்ற படத்தை அமெரிக்காவே இந்தியாவிற்கு வந்து ஹிலாரி கிளிண்டன் மூலமாக தமிழக தலைமைச் செயலகத்திற்கு நேரில் ரந்து சிறந்த திட்டங்களுக்காகவும், ஆளுமை திறனுக்காகவும் அம்மாவை பாராட்டிச் சென்றதோடு, முதல்வர் அறிவித்துள்ள திட்டங்கலை தங்கள் நாட்டில் அமல்படுத்த விரும்பி கேட்டுச் சென்றார்.

அதேபோல் இந்தியாவில் எந்த அரசியல் தலைவரும் பெற்றிடாத தங்கத்தாரகை என்ற பட்டம் முதல்வருக்கு வழங்கப்பட்டது. சிந்திப்பதிலும், செயலாற்றுவதிலும், செயல்படுத்துவதிலும் முதல்வருக்கு நிகராக யாரும்இல்லை. என்பதை இங்கிருக்கின்ற மாணவ-மாணவிகளுக்கு நான் தெரியப்படுத்துகிறேன்.

அதைப்போல தமிழ்நாட்டில் பிறக்கிற ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் திருமண வயது வந்தவுடன் திருமணத்திற்கு தேவையான தாலிக்கான தங்கத்தையும், பட்டம் பெற்ற பெண்களுக்கு ஜம்பதாயிரம் ரூபாயும், பத்தரம் வகுப்பு படித்த பெண்களுக்கு இருப்பத்தைந்தாயிரம் ரூபாயும் வழங்கி மாநிலத்திற்கு முதல்வராக மட்டுமின்றி ஒவ்வொரு குடும்பத்துக்கும் தாயாகவும் விளகி வருபவர் முதல்வர் ஜெயலலிதா.

தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தவர் ஜெயலலிதா இதற்காக அன்னை தெரசா நேரடியாக தமிழகத்திற்கு வருகை தந்து முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தி விட்டுச் சென்றார்.

இப்படி எந்த முதலமைச்சரும் பாராட்டு பெற்றதாக வரலாறு இல்லை. இப்படி இன்னும் எத்தனையோ திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கின்ற முதல்வர் ஆட்சியில் பெண்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. எனவே அரசியலில் மிகப்பெரும் தலைவராக விளங்கி வரும் முதல்வரின் தலைமையேற்று மாணவிகள் அரசியலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு கால்நடை பாராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பேசினார்.

விழாவில் தாம்பரம் நகரமன்ற துணைத் தலைவர் கோபிநாதன், கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி லட்சுமியம்மாள், சம்பத், மார்க்கெட் பாபு உள்பட நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!