சோனியாகாந்தி குடும்பத்திற்கு பிரணாப் விருந்தளித்தார்

சனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.11 - சோனியா காந்தி குடும்பத்திற்கு ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜி விருந்து கொடுத்தார். இதில் ராகுல் மற்றும் பிரியங்கா கலந்து கொண்டனர். புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குடும்பத்தினருக்கு பிரத்யேக விருந்தளித்தார். இதில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா, ராபர்ட் வதேரா, பிரியங்காவின் குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் அவரது மனைவி சுவ்ரா முகர்ஜியும் சோனயா குடும்பத்தினரை அன்புடன் வரவேற்று உபசரித்தனர். சோனியாகாந்தி தன் உடல் நலம் கருதி எளிய உணவையே சாப்பிட்டு வருகிறார். இதனால் இந்த விருந்து எளிய முறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. சூப், சாலட், ரொட்டி, பருப்பு, கோழி கறி, ஆட்டுக் கறி ஆகியவை குறைந்த அளவில் பரிமாறப்பட்டது.

இவ்விருத்தில் பிரணாப் முகர்ஜியின் 2 மகன்கள், 2 மருமகள்கள், மகள் சர்மிஸ்டா ஆகியோர் கலந்து கொண்டனர். பிரணாப் முகர்ஜி, சோனியாகாந்தி, ராகுல் ஆகியோர் தனியாக 10 நிமிடம் உரையாடினர். அவர்கள் அரசியல் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. விருந்து அரசியல் டெல்லியில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி விட்டது. இதற்கு பிராணப் முகர்ஜியும் விதிவிலக்கல்ல. பிரதமர் மன்மோகன்சிங் குடும்பத்திற்கும் அவர் விருந்தளிக்க முடிவு செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: