முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் தலைவர்களின் பெயர்களை வெளியிடுவேன்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி. ஆக.12 - ஊழல் தலைவர்களின் பெயர்களை வெளியிடுவேன் என்று யோகா குரு பாஆப ராம்தேவ் மிரட்டல் விடுத்துள்ளார்.வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள  ரூ. 20,000 லட்சம் கோடியை மீட்க மத்திய  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி  யோகா குரு பதாபா ராம்தேவ் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் மூன்றாவது நாளாக நேறு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இந்த உண்ணாவிரதம் நேற்றுடன் முடிந்தது.

இந்த உண்ணாவிரதத்தில் ராம்தேவின் ஆதரவாளர்கள்  ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.

தனது  கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால்  தனது  போராட்டத்தை  மேலும் தீவிரப்படுத்தப்போவதாக ராம்தேவ் எச்சரித்துள்ளார்.

உண்ணாவிரதத்திற்கு இடையே  தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ராம்தேவ்  தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால்  ஊழல்  தலைவர்களின் பெயர்களை வெளியிடுவேன் என்றும் மிரட்டல்  விடுத்துள்ளார்.

நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்களை நாட்டிற்கு அடையாளம் காட்டுவேன் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சுதந்திர தினத்தன்று ஒரு கண்ணியமான மனிதர்  தேசியக்கொடியை பறக்கவிட்டால்  அது  உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு மரியாதையை உயர்த்தும் என்றும் அவர்  கூறினார்.

கறுப்பு பணத்தை மீட்கும் விஷயத்திலும், ஊழலை ஒழிக்கும் விஷயத்திலும்  பிரதமர் மன்மோகன்  சிங்  தனது கண்ணியத்தை  காட்ட வேண்டும் என்று ஏற்கனவே  இதே   உண்மாவிரரத  கூட்டத்தில் ராம்தேவ்  ஊகறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாபா ராம்தேவ் நேற்று மாலை  தனது  உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர்  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago