LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப். - 6 - நேர்மையாக செயல்படும் அதிகாரிகள் பயப்படத்தேவையில்லை. அவர்களுக்கு தேர்தல் ஆணையம் பக்கபலமாக இருக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நாங்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று ஆய்வு செய்துள்ளோம். வீடு தோறும் வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் nullத் சிலிப் வழங்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இன்னும் 3 நாட்களுக்குள் இந்த பணி முடிந்து விடும். இதன்பிறகும் பூத் ஸ்லிப்புகள் கொடுக்க வேண்டியிருந்தால் தேர்தலுக்கு முன்னதாக மற்றொரு நாளில் கொடுக்கப்படும்.
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களில் இதுவரை 66 ஆயிரத்து 231 பேர் தபால் ஓட்டுக்கள் போட்டுள்ளனர்.
வாக்குச் சாவடிகளில் நாம் செல்வதற்கு முன்பே வேறு யாரும் சென்று கள்ள ஓட்டு போட்டு விட்டால் வாக்காளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. தேர்தல் அதிகாரியிடம் அடையாள அட்டையை காட்டி வாக்காளர்கள் டெண்டர்டு ஓட்டு எனப்படும் தங்கள் வாக்கு உரிமையை பதிவு செய்யலாம். இதற்காக வாக்குச் சாவடிகளில் ஓட்டுச் சீட்டும் வைக்கப்பட்டு இருக்கும். கள்ள ஓட்டு போடப்படுவது கண்டு பிடிக்கப்பட்டால் ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.
வாக்குப்பதிவை கண்காணிக்க 10 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் வெப்காமிரா மூலம் வாக்குச் சாவடிக்குள் வரும் அனைவரும் கண்காணிக்கப்படுவார்கள். சுமார் 5 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் வீடியோ மூலம் ஓட்டுப்பதிவு பதிவு செய்யப்படும். கள்ள ஓட்டு போட்டது தெரியவந்தால், உடனடியாக இந்த வெப்கேமராவில் பதிவானதை வைத்து யார் கள்ள ஓட்டு போட்டது என்று கண்டுபிடித்து விடலாம். எனவே, வாக்காளர்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் கள்ள ஓட்டு போட முயற்சிக்காதீர்கள்.
தேர்தல் பாதுகாப்புக்காக ஏற்கனவே வெளி மாநிலங்களில் இருந்து போலீசார் வந்துள்ளனர். கூடுதலாக மேலும் சில கம்பெனி துணை ராணுவ படையினர் வர உள்ளனர்.
நேற்று முன்தினம் வரை (3ம் தேதி) நடந்த வாகன சோதனைகளில் ரூ.22 கோடியே 68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 10 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் டீ கடையில் ரூ. 40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ. 7 லட்சம் கைப்பற்றப்பட்டது. மதுரையில் ரூ. 19 லட்சத்து 6 ஆயிரம் பணத்தை மக்களே கைப்பற்றி போலீசாரிடம் கொடுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ராமலிங்கம் என்பவரிடம் ரூ.8 லட்சம் கைப்பற்றப்பட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த இவர் அரிமலம் பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார்.
திருச்சி பொன்னகரில் நேற்று(நேற்று முன்தினம்) ஆம்னி பஸ்சில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 5 கோடியே 11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி ஆர்.டி.ஓ. சங்கீதாவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் உடனடியாக விரைந்து சென்று நடவடிக்கை எடுத்ததில் இந்த பணம் கைப்பற்றப்பட்டது. ஒரு பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் மேல் பகுதியில் இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த பணம் யாருக்கு சொந்தமானது என்பது பற்றி எம்.ஜே. டிராவல்ஸ் பஸ் உரிமையாளரிடம் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.
இதனைத்தொடர்ந்து நிருபர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு பிரவீன்குமார் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி நடப்பதாக முதலமைச்சர் கருணாநிதி தேர்தல் கமிஷன் மீது குற்றம் சாட்டுகிறாரே?
பதில்: நாங்கள் சட்டப்படி, விதிமுறைப்படி தான் செயல் படுகிறோம்.
கேள்வி: மதுரை தாசில்தார் தாக்கப்பட்ட சம்பவத்தில் கலெக்டர் வற்புறுத்தலின்பேரில் புகார் கொடுத்ததாக தாசில்தார் கூறி உள்ளாரே?
பதில்: அவரது கடிதம் தேர்தல் ஆணையத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து கலெக்டரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். எது உண்மையோ அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணியில் சரியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு எங்களது ஆதரவு இருக்கும்.
கேள்வி: நேர்மையான அதிகாரிகளை மிரட்டும் சம்பவம் மதுரையில் அதிகமாக காணப்படுகிறதே?
பதில்:நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகள் மிரட்டலுக்கு பயப்படத்தேவையில்லை. அவர்களுக்கு தேர்தல் ஆணையம் எப்போதுமே பக்கபலமாக இருக்கும்.
கேள்வி: மதுரைக்கு கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் அனுப்பப்படுவார்களா?
பதில்: தேவைப்பட்டால் அனுப்புவோம்.
கேள்வி: மத்திய அமைச்சர் அழகிரி மீது என்ன நடவடிக்கை இருக்கும்?
பதில்: அவர்மீது என்ன கேஸ் வருகிறதோ, அதன் அடிப்படையில் நடவடிக்கை இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், தேர்தல் விதி மீறல் தொடர்பாக எங்களுக்கு கால் சென்டர் மூலம் 1,400 புகார்கள் வந்துள்ளது. விதிகளை மீறியதாக 55 ஆயிரத்து 341 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் மூத்த குடிமக்கள் வாக்களிப்பதற்காக தனி பூத்துகள் அமைக்கப்படும். அதே போல் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக சென்று வாக்களிக்க ரேம்ப் அமைக்கப்படும். பார்வையற்றோருக்கு என பிரெய்லி முறையில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர்கள் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு பிரவீன்குமார் கூறினார். பேட்டியின்போது துணை தேர்தல் அதிகாரி அமுதா உடனிருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
Devil Eggs.![]() 1 day 6 hours ago |
பொரி உப்புமா![]() 6 days 2 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 1 day ago |
-
2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை : சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியீடு
17 Aug 2022லண்டன் : 2023-27 ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.
-
குறைந்த காற்றின் வேகம் குறைந்தது: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் கடும் பின்னடைவு
17 Aug 2022சென்னை : குறைந்த காற்றின் வேகம் குறைந்ததால் தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 18-08-2022.
18 Aug 2022 -
ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு: 30 பேர் பலி - பலர் படுகாயம்
18 Aug 2022காபூல்: ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 30 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர்.
-
மனக்கசப்பை தூக்கி எறிந்து அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு
18 Aug 2022சென்னை: மனக்கசப்பை தூக்கி எறிந்துவிட்டு அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் என்று இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்துள்ளார்.
-
உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி எடுங்கள் : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
17 Aug 2022டெல்லி : உலகக்கோப்பை கால்பந்து இந்தியாவில் நடத்த முயற்சி எடுங்கள் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
-
காருண்யா பல்கலைக்கழகத்துக்கு உயர்தர அங்கீகாரம்: நாக் கமிட்டி
17 Aug 2022கோவை : காருண்யா பல்கலைக்கழகத்துக்கு உயர்தர அங்கீகாரம் நாக் கமிட்டி வழங்கியது.
-
செஸ் போட்டி: முதல் சுற்றில் தமிழக வீரர் குகேஷ் வெற்றி
17 Aug 2022சென்னை : டர்கிஷ் செஸ் சூப்பர் லீக் போட்டியில் விளையாடி வரும் குகேஷ் முதல் சுற்றில் வெற்றியடைந்துள்ளார்.
-
3 போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பம்: முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா - ஜிம்பாப்வே பலப்பரீட்சை
17 Aug 2022ஹாராரே : இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
-
பயணிகள் கொரோனா நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் : விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ உத்தரவு
17 Aug 2022புதுடெல்லி : கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
-
ஈரோடு, கருமுட்டை விற்பனை வழக்கு: நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது மாவட்ட கலெக்டர் உத்தரவு
18 Aug 2022ஈரோடு: ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
-
ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
18 Aug 2022திருவனந்தபுரம்: ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது என கேரள நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.
-
தமிழக - கேரள எல்லையில் 2 நாட்களாக தேடப்பட்ட காட்டு யானை சிக்கியது
17 Aug 2022கோவை : தமிழக - கேரள எல்லையில் 2 நாட்களாக தேடப்பட்ட காட்டு யானையை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
-
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இ.பி.எஸ். தரப்பு அப்பீல்
18 Aug 2022சென்னை : கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இ.பி.எஸ்.
-
கவுதம் அதானிக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு ஒப்புதல்
17 Aug 2022மும்பை : தொழிலதிபர் கவுதம் அதானிக்கு சிஆர்பிஎப் கமாண்டோக்கள் மூலம் இசட் பிரிவு விஐபி பாதுகாப்பு வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
ஆர்டர்லி முறை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்: தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி..க்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு
18 Aug 2022சென்னை: ஆர்டர்லி முறை ஒழிக்க அரசு மற்றும் டி.ஜி.பி. எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு: கனடா செல்லும் சபாநாயகருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
18 Aug 2022சென்னை: கனடாவில் நடைபெறவிருக்கும் 65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்க உள்ளார்.
-
உக்ரைன் போரில் சிறைக்கைதிகளை ஈடுபடுத்தும் ரஷ்யா முடிவிற்கு எதிர்ப்பு
18 Aug 2022மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிராகப் போரிட சிறைக்கைதிகளை ஈடுபடுத்த ரஷ்யா முடிவு செய்து அதற்கான ஆள்சேர்ப்பு நடந்து வருவதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித
-
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
18 Aug 2022சென்னை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்
-
இரு உலகக் கோப்பைகளை வெல்ல ரஸ்ஸல் விருப்பம்
17 Aug 2022சமீபத்திய மே.இ. தீவுகள் அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களில் பிரபல வீரர் ரஸ்ஸல் இடம்பெறவில்லை.
-
பேருந்துகளில் பெண்களை முறைத்து பார்க்கும் ஆண்களை இறக்கிவிடலாம் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்
18 Aug 2022சென்னை: முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
-
கொரோனா பேரிடரால் ஜப்பானில் 2 வருடங்களில் 8 ஆயிரம் பேர் தற்கொலை
18 Aug 2022டோக்யோ: கொரோனா பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான பல்வேறு விஷயங்களில், மனித வாழ்க்கையும் ஒன்றாக மாறிவிட்டது.
-
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: ஐந்து பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
18 Aug 2022விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
-
3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள்... வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில்
18 Aug 2022சத்தீஸ்கர்: 3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள் கொண்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
-
தேசத்தின் லட்சியத்தை அடைய நாம், நம்மை அர்ப்பணிப்போம் கவர்னர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
18 Aug 2022சென்னை: தேசத்தின் லட்சியத்தை அடைய நாம், நம்மை அர்ப்பணிப்போம் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தாக தெரிவித்துள்ளார்.