அலிகார் முஸ்லீம் பல்கலைக்கு ஹமீது அன்சாரி விஜயம்

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி. செப்.22 - அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியிர் கே. ஏ. நிஜாம் மையத்தை இம்மாதம் 24 ம் தேதி  துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி துவக்கி வைக்கிறார். கடந்த 1994 ம் ஆண்டு  மறைந்த முஸ்லீம் பேராசாரியர்  கே. ஏ. நிஜாம் பெயரில்  அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில்  குரான் படிப்பு தொடர்பான மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை திறந்து வைக்க வருமாறு  துணை  ஜனாதிபதி ஹமீது அன்சாரிக்கு அழைப்பு  கொடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று வருகிற  24 ம் தேதி  ஹமீது அன்சாரி அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திற்கு  செல்கிறார்.  அங்கு நடைபெறும் விழாவில் அவர் கே.ஏ. நிஜாம் மையத்தை  திறந்து வைத்து உரை நிகழ்த்துகிறார்.

மரபு வழி கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கப்பதோடு  நவீன தொழில்நுட்ப வழியிலும்  ஊக்குவிக்கப்பதற்காக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று  பல்கலைக்கழக  நிர்வாகி ஒருவர்  கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: