பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவி கற்பழித்துக் கொலை

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

சசாராம், ஜூலை. 22 - பீகார் மாநிலத்தில், ரோதாஸ் மாவட்டத்தில், 6-வது வகுப்புப் படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது இரு கண்களும் பறிக்கப்பட்டன.  20 வயது பெண் ஒருவர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகு இந்த மாணவி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

வட இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. பீகாரிலும் இதுபோன்று நடந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் மருத்து மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பஸ்ஸில் கற்பழிக்ப்பட்டு, பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த மாணவியின் சடலம், ராஜ்பூர் காவல் நிலையம் அருகிலுள்ள மாந்தோப்பிலிருந்து மீட்கப்பட்டது. இந்த கற்பழிப்பு சம்பவத்தை கேட்ட மக்கள் கொதித்தெழுந்து ராஜ்பூர் சதுக்கத்திலுள்ள மார்க்கெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்புக்கு தீ வைத்தனர். இது ரோதாஸ் மாவட்டத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்த ஜீப் கலவரத்தை அடக்குவதற்கு போலீஸார் விரைந்து செல்வதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த பள்ளி மாணவி இறந்ததற்கு போலீஸாரின் அலட்சியமே காரணம் என்று மக்கள் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் ராஜ்பூர் சாலையில் உட்கார்ந்து மறியல் செய்தனர். இதனால் டெஹ்ரி, நஸ்ரிகனி, நோகா, சசாராம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் சில மணி நேரம் தாமதமாகச் சென்றன. போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்ட்  (பொறுப்பு) அபய்குமார் சம்பவ இடத்துக்குச் சென்று மக்களை சமாதானம் செய்தார். 

ஆனால் அவர்கள் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்என்று வலியுறுத்தினர். இதையடுத்து,அவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டு, போலீஸ் துப்பறியும் நாயும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர் என்று லால் என்ற அதிகாரி கூறினார். 

கற்பழித்துச் கொல்லப்பட்ட இந்த 6-ம் வகுப்பு மாணவி தச்சுத்தொழிலாளியின் மகளாவார்.  கடந்த சனிக்கிழமை மாலையிலிருந்து இவரைக் காணவில்லை.  இவர் வீட்டுக்கு திரும்பி வரவே இல்லை. பல இடங்களில் தேடியும் இந்த மாணவி பற்றி எந்தத் தகவலும் கிடைக்காததால் இவரது குடும்பத்தினர் போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனர். ராஜ்பூரில் இந்ச சம்பவம் நடந்துள்ளது. இது  காரகாட் தொகுதியில் உள்ளது.

இந்தத் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஸ்வர் ராஜ், இந்த கற்பழிப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். எனவே மக்கள் அமைதி காத்து போலீஸாருக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்று மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: