முக்கிய செய்திகள்

காஷ்மீரில் கிலானிக்கு செல்வாக்கு குறைந்துவிட்டது

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      இந்தியா
Umar abdulah

 

ஸ்ரீநகர்,மே.7 - பிரிவினைவாத இயக்கத் தலைவர் சையத் அலி ஷா கிலானியின் செல்வாக்கு குறைந்துவிட்டது என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் பிரிவினைவாத இயக்கத்தலைவர் கிலானிக்கு மக்களிடையே ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. அவர் சொல்வதற்கெல்லாம் கீழ் படியும் மக்கள் பெருமளவு உள்ளனர். அதனால் தாம் சொல்வதை மக்கள் கேட்பார்கள் என்று நினைத்து அல்கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் பின்லேடன் மறைவுக்கு தொழுகை நடத்தும்படி காஷ்மீர் மக்களை கிலானி கேட்டுக்கொண்டார். ஆனால் இதற்கு காஷ்மீர் மாநில மக்கள் செவிசாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்தநிலையில் மாநில முதல்வர் உமர் அப்துல்லா நேற்று ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் மாநில பஞ்சாயத்து தேர்தலில் கிலானி நடந்துகொள்ளும் முறைக்கு ஏற்கனவே மக்கள் செல்வாக்கு குறைந்தது. அதனையடுத்து பின்லேடன் விஷயத்திலும் கிலானிக்கு மக்கள் செல்வாக்கு குறைந்துள்ளது. இந்த வாரம் ஆரம்பத்தில் பின்லேடன் கொல்லப்பட்டான். ஆனால் இன்று (வெள்ளிக்கிழமை) தொழுகை நடத்தும்படி காஷ்மீர் மக்களை கிலானி கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் கிலானி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது என்றார். 

ஸ்ரீநகரில் உள்ள பதமோலா பகுதியில் பின்லேடன் மறைவுக்கு தொழுகை ஊர்வலம் என் தலைமையில் நடைபெறும் என்று கிலானி அறிவித்திருந்தார். அதனால் ஏதாவது அசம்பாவித சம்பவம் நடைபெறலாம் என்று அதிகாரிகளால் கருதியதால் கிலானி கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: