முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்.,கை ராகுலால் மீட்க முடியாது: அன்னா ஹசாரே

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2014      ஊழல்
Image Unavailable

 

ராலேகான் சித்தி, ஜன. 4 - மக்களவை தேர்தல் தோல்வியில் இருந்து காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தியாலும் காப்பாற்ற முடியாது என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் ராலேகான் சித்தியில் அன்னா ஹசாரே நிருபர்களிடம் அளித்த பேட்டி வருமாறு _ 

லோக்பால் சட்டத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்துள்ளது. இது போல் வேறு சில நடவடிக்கைகளையும் அவர்கள் எடுத்து வருகிறார்கள். 

இவை எல்லாம் அந்த கட்சிக்கு உதவாது. ஐந்து மாநில தேர்தல் தோல்விக்கு பின்னரே காங்கிரஸ் இந்த நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியது. 

வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் தோல்வியில் இருந்து காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தியாலும் மீட் க முடியாது. ஊழலுக்கு எதிராக மேலும் பல உறுதியான நடவடிக்கைகளை காங்கிரஸ் எடுக்க வேண்டும். 

மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மேலும் பல சட்டங்களை கொண்டு வந்தால் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சில இடங்களில் ஆறுதல் வெற்றியாவது கிடைக்கும். 

லோக்பால் சட்டத்தால் 50 சதவீத ஊழல்களை மட்டுமே தடுக்க முடியும். எம்.பி.க்களை திரும்ப அழைக்கும் அதிகாரம், கிராம பஞ்சாயத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்குதல் தொடர்பான சட்டங்கள் கொண்டு வரப்பட்டால் மட்டுமே எஞ்சிய 50 சதவீத ஊழல்களை தடுக்க முடியும். இவ்வாறு அன்னா கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago