முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய விருது பெற்ற கலைஞர்களுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, மே.22 - ​ தேசி விருதுபெற்ற கலைஞர்களுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.இது குறித்து நடிகர் சங்கம் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் விடுத்துள்ள செய்து குறிப்பில் கூறியிருப்பதாவது:- தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த நடிகருக்கான விருது பெறும் நடிகர் தனுஷ், நடிகை சரண்யா, சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெறும் வைரமுத்து, சிறந்த இயக்குனராக தேர்வாகியுள்ள ஆடுகளம் படத்தை இயக்கிய வெற்றிமாறன், துணை நடிகர் தம்பி ராமையா ஆகியோருக்கும், மேலும், தேசிய விருது பெற உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony