நேபாளத்தில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

காட்மாண்டு, பிப். 4 - நேபாளத்தின் மலைப் பகுதியில் ஹிந்து யாத்ரிகர்களுடன் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக் குள்ளானதில் 10 பேர் பலியானதாக போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை சிந்துலி மாவட்டத்திலிருந்து கோட்டங் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஹலெஷி மஹதேவ் மலைக்கு 66 யாத்ரிகர்களுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. ஒகல்துங்கா மாவட்டம் சுகல்தர் கிராமம் அருகே சென்றபோது 300 மீட்டர் ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் இறந்தனர். மேலும் பலத்த காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட பிறகு இறந்தனர்.

மேலும் காயமடைந்த 56 பேர் உதய்பூரில் உள்ள கட்டாரி மருத்துவமனை, பிரத் நகரில் உள்ள நியூரோ மருத்துவமனை மற்றும் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள பி அன்ட் பி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: