ஹாப்மேன் வீட்டில் ஹெராயின் பொட்டலங்கள்

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2014      சினிமா
Image Unavailable

 

ஹாலிவுட், பிப். 6 - கடந்த 2-ம் தேதி மறைந்த ஹாலிவுட் நடிகரும் இயக்குநருமான பிலிப் சீமோர் ஹாஃப்மேன் வீட்டிலிருந்து 65 பொட்டலம் ஹெராயினை போலீஸார் கைப் பற்றியுள்ளனர். ஏற்கெனவே ஏராளமான போதைமருந்தை அவர் பயன்படுத்தி இருப்பதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன.

பிலிப் சீமோர் ஹாப்ஃமேன் (46) கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் வீட்டு குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது வீட்டைச் சோதனையிட்ட போலீஸார் முதலில் 50 பொட்டலங்கள் போதைப் பொருள் இருந்ததாகத் தெரிவித்தனர். பின்னர் மேலும் சில பொட்டலங்களும் கண்டறியப் பட்டன. பயன்படுத்தப்பட்டு காலியாக இருந்த 5 ஹெராயின் பொட்ட லங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இதுவரை 65 பொட்டலம் ஹெராயின் மீட்கப்பட்டுள்ளது. இந்த ஹெராயின் எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்த விசாரணையை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். ஹெராயினின் தரம் குறித்த பரிசோதனையும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

ஹாஃப்மேன், அளவுக்கு அதிகமான போதைப் பொருளை உட்கொண்டதால்தான் உயிரி ழந்தார் எனக் கருதப்படுகிறது. பிரேதப் பரிசோத னைக்குப் பிறகே முழு உண்மை தெரிய வரும்.

அவர் வீட்டிலிருந்து போதை ஊசிகளும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. மிகச்சிறந்த குணச்சித்திர நடிகரான ஹாஃப்மேனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகை யில் பிராட்வே நாடக அரங்குகள் வரும் புதன்கிழமை 7.45 மணிக்கு ஒரு நிமிடம் காட்சிகளை நிறுத்தி வைத்து மௌன அஞ்சலி செலுத்தவுள்ளன.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: