சுதாட்டத்தில் ஈடுபடுமாறு மெக்கல்லத்தை அனுகவில்லை

செவ்வாய்க்கிழமை, 20 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், மே 21 - ஐசிசி சூதாட்ட விசாரணையில் சூதாட்ட வீரராகத் தன் பெயர் அடிபடுவதை நியூசீலாந்து முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ன்ஸ் முழுதும் மறுத்துள்ளார்.

தான் ஹீரோவாக மதித்த ஒரு வீரர் தன்னை இருமுறை அணுகி சூதாட்டத்தில் ஈடுபட வலியுறுத்தினார் என்று பிரெண்டன் மெக்கல்லம் கூறிய அந்த வீரர் கிறிஸ் கெய்ன்ஸ் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சு எழ கிறிஸ் கெய்ன்ஸ் அதனைக் கடுமையாக மறுத்துள்ளார். பிளேயர் X என்று மெக்கல்லமும், லூ வின்செண்ட்டும் குறிப்பிட்ட அந்த வீர்ர் மீது இருவரும் கடுமையான சூதாட்டக் குற்றச்சாட்டுகளை வைத்தனர் என்பதை நான் அறிவேன். ஐசிசி, மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது நன்கு அறியப்பட்டதே. 

 

இதில் என்னுடைய பெயரும் தொடர்புப் படுத்தப்படுகிறது நான்தானா அந்த சூதாட்ட வீரர் என்று என்னை கேட்கின்றனர். இந்த விசாரணையில் எனக்குக் கிடைத்தக் குறைந்தபட்சத் தகவல்களின் அடிப்படையில் நான் தான் அந்த குறிப்பிட்ட வீரர் என்று கூறப்பட்டு வருகிறது. என் மீதான இந்தப் புகார்கள் முழுதும் பொய். என்று கெய்ன்ஸ் மறுப்பு வெளியிட்டுள்ளார். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து