முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்கு பதிவு எந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, அக்.19 - சென்னை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் சென்னையில் 18 மையங்களில் 4 அடுக்கு போலீசார் பாதுகாப்புகள் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர் தேர்தல்களில் முதல்கட்டமாக நடந்த அக்.17 அன்று தேர்தல் நடைபெற்றது. மிகவும் அமைதியாகவும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு இன்றி தேர்தல் சிறப்பாக நடைபெற்றது.

சென்னையில் 1500 மையங்களில் 4876 வாக்கு சாவடிகளில் போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது. இதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்று வக்களித்தனர். கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. குண்டர்களை வைத்து வெளியேற்றம் நடத்தியது. பொதுமக்களை, தேர்தல் ஏஜண்டுகளை தாக்கி வன்முறையை நடத்தி விட்டு வாக்கு சாவடிகளை ஆக்ரமித்து தேர்தலை நடத்தி கள்ள ஓட்டுகளை பதிவு செய்தனர்.

கடந்த தேர்தலை மனதில் வைத்து அச்சத்துடன் வாக்களிக்க வந்த பொதுமக்களுக்கு நேற்று அமைதியாக நடைபெற்ற தேர்தல் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்தது.

சென்னையில் ஆயிரம் விளக்கில், திருவொற்றியூரில் தி.மு.க.வினர் அ.தி.மு.க. நிர்வாகிகளை கத்தியால் வெட்டி வெறியாட்டம் போட்டனர்.

நேற்றுமாலை அமைதியான முறையில் தேர்தல் முடிவடைந்தது. வாக்கு பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் சென்னையில் 18 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 18 மையங்களில் 4 அடுக்கு போலீஸ்சார் துணைய்யுடன் வாக்கு பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்படுகிறது. 

வாக்கு பதிவு மையத்தில் வாக்கு பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறை வாக்கு எண்ணும் இடத்தின் உள்வாயில், வெளிவாயில் என 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உதவி ஆணையர் தலைமையில் 24 மணிநேரமும் 3 ஷிப்டுகளாக போலீசார்  பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

வாக்கு எண்ணும் நாள் அன்று தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் தலைமை ஏஜண்ட் மற்றும் தேர்தல் கமிஷனின் அனுமதி  பெற்ற அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வார்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

நேற்று வாக்கு எண்ணிக்கை மையங்களை சென்னை மாநகர காவல் துறை ஆணையர் திரிபாதியும், மாநகராட்சி தலைவர் கார்த்திகேயனும் பார்வையிட்டனர் லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு எந்திரங்களின் பாதுகாப்பை கிழக்கு மண்டல காவல்துறை இணை ஆணையத் சேஷசாயி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னையில் வாக்கு பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 18 மையங்கள் விபரம் வருமாறு.

 

1. வார்டு 1 முதல் 7 வரை 8 முதல் 14 வரை வார்டுகள் -வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, திருவொற்றியூர்.

2. வார்டு 15 முதல் 21 வரை வார்டுகள் - செயின்ட் செபாஸ்டீன் இன்டஸ்டிரியல் பயிற்சி கல்லூரி, மாதவரம். 

3. வார்டு 22 முதல் 25 வரை 26 முதல் 33 வரை வார்டுகள் -வேளம்மாள் பொறியியல் கல்லூரி, சென்னை.

4. வார்டு 34 முதல் 37 வரை, 46தியாகராய கல்லூரி, பழைய வண்ணாரப்பேட்டை.

5. வார்டு 38 முதல் 41 வரை, 42 முதல் 45 வரை, 47, 48 வார்டு -சென்னை மேல்நிலைப் பள்ளி தண்டையார்பேட்டை.

6. வார்டு 49 முதல் 53 வரை 54 முதல் 57 வரை, 59 வார்டு -பாரதி கலை கல்லூரி, பிரகாசம் சாலை, சென்னை.

7. வார்டு 58, 60 முதல் 63 வரை 115 முதல் 120 வரை -ராணி மேரி கல்லூரி, காமராஜர் சாலை, சென்னை.

8. வார்டு 64 முதல் 68 வரை 69 முதல் 73 வரை -பி.டி.செங்கல்வராயன் பால்டெக்னிக், வேப்பேரி, சென்னை.

9. வார்டு 74 முதல் 78 வரை 109 முதல் 144 வரை -லயோலா கல்லூரி, ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம்.

10. வார்டு 79 முதல் 86 வரை 87 முதல் 93 வரை -டி.ஏ.வி. சீனியர் செகன்டரி ஆண்கள் பள்ளி, திருமங்கலம் சாலை, முகப்பேர், சென்னை.

11. வார்டு 94 முதல் 98 வரை 99 முதல் 103 வரை, 104 முதல் 108 வரை -பச்சையப்பன் கல்லூரி, ஈ.வெ.ரா பெரியார் சாலை.

12. வார்டு 121 முதல் 126 வரை 176 முதல் 182 வரை -பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை.

13. வார்டு 127 முதல் 129 வரை, 130, 131, 132, 133, 134, 135, 137, 138 - மீனாட்சி பொறியியல் கல்லூரி, விருகம்பாக்கம், சென்னை. 14.  வார்டு 136, 139 முதல் 142 வரை 170 முதல் 175 வரை - சென்ட்ரல் பால்டெக்னிக், ராஜீவ் காந்தி சாலை, அடையாறு, சென்னை.

15. வார்டு 143 முதல் 149 வரை 150 முதல் 155 வரை ராஜ ராஜேஸ்வரி பொறியியல் கல்லூரி, அடையாளம் பட்டு, சென்னை-95.

16. வார்டு 156 முதல் 159 வரை 168, 169 160 முதல் 167 வரை மோன்ட் போர்ட் பயிற்சி இன்ஸ்டிடியூட், கன்ட்டோன்மென்ட் அலுவலக சாலை, சென்னை-16.

17. வார்டு 183 முதல் 186 வரை 187 முதல் 191 வரை - ஆசான் மெமோரியல் கல்லூரி, வேளச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை, சென்னை​100.

18. வார்டு 192 முதல் 195 வரை 196 முதல் 200 வரை டி.பி. ஜெயின் கல்லூரி, பழைய மகாபலிபுரம் சாலை, துரைப்பாக்கம், சென்னை​69. ஆகிய இடங்களாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!