முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தக்காளி ரசம்

Cooking time in minutes: 
15
Ingredients: 

 

தக்காளி ரசம் செய்யத்  தேவையான பொருள்கள்; 

 1. தக்காளி - 2
 2. பூண்டு – 4 பல்.
 3. பச்சை மிளகாய் - 1.
 4. கறிவேப்பிலை,கொத்தமல்லி, - சிறிதளவு.
 5. ரசப் பொடி - 1 ½ ஸ்பூன்.
 6. சோம்பு - சிறிதளவு.
 7. புளி - சிறிதளவு.
 8. மிளகு தூள் - 1/4 ஸ்பூன்.
 9. ரிபைன்ட் ஆயில் – 2 ஸ்பூன்.
 10. கடுகு – சிறிதளவு.
 11. சீரகம் – சிறிதளவு.
 12. பெருங்காயம்  – சிறிதளவு.
 13. மஞ்சள் தூள் -  சிறிதளவு.
 14. உப்பு - தேவையான அளவு.
Method: 

 

செய்முறை ;-

 1. ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிதளவு புளியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து புளிக்கரைசலை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 2. 2 தக்காளியை எடுத்து 1.1/2 தக்காளியை பொடியாகவும்,1/2 தக்காளியை பெரிதாகவும் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
 3. சோம்பு சிறிதளவு, பச்சை மிளகாய் 1, பூண்டு 4 பல் ஆகியவற்றை ஒரு சிறிய உரலில் போட்டு லேசாக இடித்து வைத்துக்கொள்ளவும்.
 4. அடுப்பில் கடாய் வைத்து நன்கு காய்ந்த உடன் ரிபைன்ட் ஆயில் 2 ஸ்பூன்ற்றவும்.
 5. எண்ணெய் சூடானவுடன்  கடுகு  சிறிதளவு, சீரகம் சிறிதளவு மற்றும் பெருங்காயம் சிறிதளவு போட்டு மிதமான சூட்டில் வதக்கவும்.
 6. பொடியாக நறுக்கி வைத்த ஒரு தக்காளி மற்றும் உரலில் போட்டு லேசாக இடித்து வைத்துள்ள சோம்பு, பச்சை மிளகாய் பூண்டு கலவை போட்டு கலந்து விடவும்.
 7. மஞ்சள் தூள் சிறிதளவு,மிளகு தூள் 1/4 ஸ்பூன், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
 8. தயார் செய்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி கலந்து விடவும்.
 9. பெரிதாக நறுக்கி வைத்த 1/2 தக்காளி மற்றும் ரசப் பொடி 1 ½ ஸ்பூன் போட்டு கலந்து விட்டு ஒரு நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.
 10. பிறகு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 2 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.
 11. நன்கு கொதி வந்தவுடன் கொத்தமல்லி  சிறிதளவு போட்டு இறக்கி விடவும்.
 12. சுவையான  தக்காளி ரசம் ரெடி.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis