எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், விராட் கோலி, சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் நேற்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
சுற்றுப்பயணம்...
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் போட்டிகள் வதோதரா (ஜன.11), ராஜ்கோட் (ஜன.14), இந்தூர் (ஜன.18) ஆகிய இடங்களில் நடக்கிறது.
வீடியோ வெளியீடு....
இந்த நிலையில், இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோவை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது. ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சி எடுக்க....
இதற்கிடையே இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா அசோக் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆதித்யா அசோக் கூறுகையில், ‘அதிர்ஷ்டவசமாக சென்னைக்கு வந்து பயிற்சி எடுக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்காக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். இந்த பயிற்சியின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


