முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து சாதனைகளை படையுங்கள்: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 6 ஜனவரி 2026      சினிமா
A R Rahman 2023-09-11

சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் பிரபலமான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் கலக்கிவரும் அவர் நேற்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரைத்துறையினரும், அரசியல் கட்சியினர் பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இசையால் எல்லைகளைக் கடந்து, எட்டுத்திக்கும் ஆளும் அன்பு இளவல் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! உங்களது இசையைப் போலவே நீங்களும் என்றும் இளமையோடும் துள்ளலோடும் திகழ்ந்து, தொடர்ந்து சாதனைகளைப் படைத்திட விழைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து