முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடமேற்கு பாக்.கில் ராணுவ தாக்குதலில் 34 தீவிரவாதிகள் பலி

வியாழக்கிழமை, 19 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - பாகிஸ்தானில் வடமேற்கு பழங்குடி ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 34 தீவிரவாதிகள் பலியானார்கள். அப்பிராந்தியத்தில் இருக்கும் ஏராளமான தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன என்று பாகிஸ்தான் ராணுவம் தகவல் வெளியிட்டது.
 
பாகிஸ்தானின் வடமேற்கே பெஷாவர் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவ பள்ளி மீது தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கி தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலில் 136 பள்ளி குழந்தைகள் பலியானார்கள். பள்ளி குழந்தைகள் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, அவர்களை முற்றிலும் ஒழிக்க பாகிஸ்தான் ராணுவம் களத்தில் இறங்கியது.

இதை தொடர்ந்து, கைபர் பக்துன்கவா பிராந்தியத்தில் பெஷாவருக்கு அருகே திர்ரா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருக்கும் தலிபான் தீவிரவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. பழங்குடி மக்கள் வசிக்கும் வடக்கு வசிரிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்கவா பிராந்தியங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் இது வரை ஏராளமான தலிபான் தீவிரவாதிகள் பலியானார்கள். மற்றொரு பக்கம், பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கைபர் பக்துன்கவா பிராந்தியத்தில் இருக்கும் திர்ரா நகரில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ஏராளாமான தீவிவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அங்கிருந்த 34 தலிபான் தீவிரவாதிகள் வான்வழி தாக்குதலில் பலியானார்கள். அங்கு தலிபான்கள் மறைத்து வைத்திருந்த ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து