முக்கிய செய்திகள்

மனித நோய்களை குணப்படுத்த உதவும் தொப்புள்கொடி ஸ்டெம் செல்கள் !

செவ்வாய்க்கிழமை, 8 நவம்பர் 2016      மருத்துவ பூமி
stem-cells

இரத்த புற்றுநோய் உள்ளிட்ட 80¬-க்கும் மேற்பட்ட மனித நோய்களை குணப்படுத்த உதவ மற்றும் எதிர்த்து போராடும் சக்தி படைத்த தொப்புள்கொடி ஸ்டெம்செல்களை பணம் செலுத்தி ஹைடெக் முறையில் சேமித்து வைத்து பாதுகாத்திடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

தாயின் கர்ப்பத்திலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து மற்றும் பிராய வாயுவை எடுத்துச் செல்வது தொப்புள்கொடியாகும். குழந்தைக்கும் தாய்க்கும் உண்டான உன்னதமான உறவை உணர்த்தும் மகத்துவமானது தொப்புள் கொடியாகும்.இருப்பினும் குழந்தை பிறந்த சில நிமிடங்களில் இந்த தொப்புள் கொடியின் கடமை முடிந்துவிட்டது என்று நினைத்து அதை அறுத்து அகற்றிவிடுகிறோம்.ஆனால் தொப்புள்கொடியின் பயன்பாடுகள் ஆயுட்காலம் முழுவதும் உள்ளது என்பது ஆச்சரியமான ஒன்றாகும். இத்தகைய சிறப்புமிக்க தொப்புள் கொடியில் தான் நோய்களை எதிர்த்து போராடிடும் ஸ்டெம்செல்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தை கருவாக உருவாகிடும் போது ஸ்டெம்செல்களின் கூட்டாகத்தான் உருவாகிறது.நாளடைவில் இந்த ஸ்டெம்செல்கள் மாறுபட்டு பல்வேறு குணாதிசயங்களை பெற்று தோல் அணுக்களாக,இரத்த அணுக்களாக,உருப்புக்களை உருவாக்கிடும் அணுக்களாக மாறுகின்றன.இப்படிப்பட்ட ஸ்டெம்செல்கள் எந்தவித குணாதிசியங்களும் இல்லாத விதை அணுக்கள் போன்றே கணக்கில் கொள்ளப்படுகிறது.உடலில் அவ்வப்போது பழைய அணுக்கள் இறந்து புதிய அணுக்கள் உருவாகின்றன.இது போன்ற பழுதுபார்த்திடும் வேலைகளை தான் ஸ்டெம்செல்கள் செய்கின்றன.இந்த உருவாக்கம் மற்றும் பழுது பார்த்திடும் சக்திகளை கொண்டிருப்பதால், ஸ்டெம்செல்கள் குணப்படுத்தும் திறனை கொண்டுள்ளது விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொடிய நோய்கள் பட்டியலில் உள்ள 80க்கும் மேற்பட்ட நோய்களை எதிர்த்து போராடிடும் சக்தியை ஸ்டெம்செல்கள் கொண்டுள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக இரத்த புற்றுநோய்,தலசிமியா உள்ளிட்ட கொடூரமான நோய்களை ஸ்டெம்செல்கள் எதிர்த்து போராடிடும் சக்தி கொண்டவையாம். உலகமெங்கிலும் பல்லாயிரக்கணக்கான மருத்து ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் விரைவில் உலகத்தை ஆட்டிப்படைக்கவுள்ள இருதய நோய்கள் மற்றும் நிரிழிவு நோய்களை கூட ஸ்டெம் செல்கள் கொண்டு குணமாக்கிடும் காலம் விரைவில் வந்துவிடும்.இதனை முன்கூட்டியே அறிந்த நமது முன்னோர்கள் தொப்புள் கொடியின் சிறப்பை அறிந்துதான் குழந்தையின் தொப்புள்கொடியை அறுத்து ஒருதாயத்திலோ அல்லது பானையில் போட்டு பத்திரப்படுத்தி வந்துள்ளனர்.

தற்போது விஞ்ஞான வளர்ச்சி விண்ணை முட்டிவிடும் அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில் நவீன முறையில் ஸ்டெம்செல்களை பாதுகாத்திடுவதற்காக ஸ்டெம்செல் பேங்கிங் எனப்படும் ஸ்டெம்செல் சேமிப்பு தொழல்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.குழந்தை பிரசவித்தவுடன் அதன் தொப்புள் கொடியை எடுத்து ஒரு பராமரிப்பு கூடத்தில் மைனஸ் 196டிகிரி குளிர்ச்சியில் தொடர்ந்து பல்லாண்டுகள் சேமித்து வைப்பது தான் ஸ்டெம்செல் பேங்கிங் ஆகும்.இது போன்று ஹைடெக் முறையில் சேமித்து வைக்கப்படும் ஸ்டெம்செல்களுக்கு காலாவதி தேதி கிடையாது.சிகிச்சைக்கு தேவைப்படும் சமயத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஸ்டெம்செல்களை திரும்பப்பெற்றுக் கொள்ளப்படும் வசதியுள்ளது.

இது போன்ற சேவையை தந்திட நாடு முழுவதிலும் ஸ்டெம்செல் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. தனியார் மற்றும் பொது ஸ்டெம்செல் வங்கிகள் என இரண்டு வகை ஸ்டெம்செல் சேமிப்பு வங்கிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன.தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு பயன்பெற தனியார் வங்கிகளிலும், தேவையுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கு பொது ஸ்டெம்செல் வங்கிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.பிறந்த குழந்தையின் உடல் நலத்தை பாதுகாத்திடுவதற்காக பெற்றோர் தங்களது குழந்தைகளின் தொப்புள்கொடி ஸ்டெம்செல்களை பாதுகாத்து சேமித்து வைத்திவோரின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.எல்லாம் தொப்புள்கொடி உறவு அறுந்து போகாமல் என்றும் நோய்நொடியின்றி நிலைத்து இருப்பதற்குத்தான்......

இதை ஷேர் செய்திடுங்கள்: