முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு

வியாழக்கிழமை, 1 மே 2025      தமிழகம்
OPS 2023-10-25

சென்னை, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவை முடிவுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்க வேண்டுமென்றால், சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியது அவசியம் என்ற நிலை இருந்தபோதிலும், இதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருந்த நிலையிலும், இதன் அடிப்படையில் கர்நாடகா, பிஹார் போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையிலும், இதனை நிறைவேற்ற தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

மாறாக, சாதிவாரி கணக்கெடுப்பினை மத்திய அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதனைக் கண்டித்து நான் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் விடுத்தனர்.

இந்தச் சூழ்நிலையில்,  பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக வெளி வந்துள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவினை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் மனதார வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து