முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மற்ற நாடுகளின் கலாச்சாரங்களை மதிப்பதே நமது கலாச்சாரத்தின் பலம்: வேவ்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

வியாழக்கிழமை, 1 மே 2025      இந்தியா
Modi-2025-05-01

மும்பை, மற்ற நாடுகளின் கலாச்சாரங்களை மதிப்பதே நமது கலாச்சாரத்தின் பலம் என்று மும்பையில் நடைபெற்ற வேவ்ஸ் உச்சி மாநாடு 2025-இல் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கான உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்,  வேவ்ஸ் என்பது  உண்மையிலேயே கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய இணைப்பின் அலை. திரைப்படங்கள், இசை, விளையாட்டு, அனிமேஷன், கதைசொல்லல் ஆகியவை இந்த அலையின் ஒரு பகுதி. வேவ்ஸ் என்பது ஒரு உலகளாவிய தளம். இது ஒவ்வொரு கலைஞருக்குமான ஒரு தளமாக இருக்கும். இங்கு ஒவ்வொரு இளைஞரும் படைப்பு உலகத்துடன் இணைக்கப்படுவார்கள்.

கடந்த 100 ஆண்டுகளில், இந்திய சினிமா எங்கோ சென்று கொண்டிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான், ராஜமௌலி, ரித்விக் கட்டக், எல்லோரும் இந்திய சினிமாவுக்கு உலகில் ஒரு இடத்தைக் கொடுத்துள்ளனர்.  இந்தியாவில் படைக்க, உலகத்திற்காக படைக்க இதுதான் சரியான நேரம். எங்கள் பொக்கிஷம் சிந்தனையைத் தூண்டும்; அது உண்மையிலேயே உலகளாவியது. எங்கள் கதைகளில் அறிவியல், வீரம் போன்றவை உள்ளன. எங்கள் பொக்கிஷக் கூடை மிகவும் வளமானது, பன்முகத்தன்மை கொண்டது. இதை உலக மக்கள் முன் வைத்திருப்பது வேவ்ஸ் இன் பெரிய பொறுப்பு.

நாங்கள் பத்ம விருதுகளை மக்கள் விருதுகளாக மாற்றியுள்ளோம். மற்ற நாடுகளின் கலாச்சாரங்களை மதிப்பதே நமது கலாச்சாரத்தின் பலம். நமது இளம் தலைமுறையினரை மனிதநேயத்திற்கு எதிரான போக்குகளிலிருந்து நாம் காப்பாற்ற வேண்டும். படைப்பாளிகள் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும்  என்று தெரிவித்தார்.

 4 நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் 90க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 1,000க்கும் மேற்பட்ட படைப்பாளிகள், 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 350க்கும் மேற்பட்ட தொடக்க நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து