முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இல்லத்தரசிகளுக்கான இலவச கணினி பயிற்சி:

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி.-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கணினிமையம் சார்பாக “இல்லத்தரசிகளுக்கான கணினி மற்றும் இன்டர்நெட் பயன்படுத்தும் முறை” குறித்து ஏழு நாள் குறுகிய கால சான்றிதழுடன் கூடிய இலவச கணினிப் பயிற்சியின் துவக்கவிழா  பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.

அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் தமது துவக்க உரையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விநிறுவனங்கள் சமுதாயம் பயன்பெறும் வகையில் ,அதனுடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.  அப்போது தான் சமுதாயத்திற்கும், பல்கலைக் கழகத்திற்கும் ஒருதொடர்பை ஏற்படுத்த முடியும் என்றார்.  இதைகுறிக்கோளாக கொண்டு, அழகப்பாபல்கலைக்கழகம் தொடர்ந்து சமுதாயம் பயன்பெறும் வகையில் பல்வேறு பயிற்சிகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக, இல்லத்தரசிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு ஒருகணினிப் பயிற்சியை அளித்து, அவர்கள் தங்களது அன்றாட பணிகளை கணினிவாயிலாக இன்டர்நெட்டைபயன்படுத்தி தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ஏதுவாக அமையும் வகையில் இப்பயிற்சிவழங்கப்படுகிறது என்றார். இதைப் போலவே அழகப்பாபல்கலைக்கழக உணவக மேலாண்மை நிறுவனம் மூலம் செட்டிநாடு உணவுகளை தயாரிப்பதற்கு தேவையான பயிற்சிகளும், பல்கலைக் கழகதிறன் மேம்பாட்டுத் துறைவாயிலாக பேப்பர் கப், ஊதுபத்தி, பினாயில், சானிடரி நாப்கின் போன்றவை தயாரிக்கும் முறைகள் குறித்தும் பயிற்சிகள் விரைவில் வழங்கப்பட உள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் அழகப்பாதிறன் மேம்பாட்டுநிறுவனத்தின் இயக்குநர் முனைவர் பூ.தர்மலிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.  கணினிமைய இயக்குநர் முனைவர் செந்தில் ராஜன் அனைவரையும் வரவேற்றார்.  காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து25-க்கும் மேற்பட்ட இல்லத்தரசிகள் இப்பயிற்சியில் நேற்று பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago