முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிக்ஸ் பேக் வைத்திட உதவும் உணவுகள்!!!

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

இன்றைய ஆண்கள் தங்களின் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.  இதனால் ஆண்கள் தினமும் ஜிம் செல்கிறார்கள். அதில் பலர் நடிகர்களை ரோல்மாடலாக வைத்துக் கொண்டு, சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கின்றனர். பொதுவாக சிக்ஸ் பேக் வைக்கும் போது, ஜிம்மில் போதிய உடற்பயிற்சியை செய்து வருவதோடு, சரியான டயட்டையும் மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் பலருக்கு சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கும் போது என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற தெரிவதில்லை. ஆகவே ஆண்கள் சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கும் போது சாப்பிட வேண்டிய உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை டயட்டில் சேர்த்து வந்தால், நல்ல அழகான சிக்ஸ் பேக்கைப் பெறலாம்.

நட்ஸ்: தசைகளின் வளர்ச்சிக்கு நட்ஸ் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். அதிலும் பாதாம், முந்திரி, வால்நட்ஸ் போன்றவற்றை அவ்வப்போது சாப்பிட்டு வர, சிக்ஸ் பேக்கை பெறலாம்.

சோய பொருட்களில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால், அவை சரும செல்கள் ப்ரீ ராடிக்கல்களால் பாதிப்படையாமல் தடுக்கும்.

முட்டை : முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் மற்றும் அமினோ ஆசிட்டுகள் அதிகம் உள்ளது. எனவே தினமும் காலையில் 3-4 முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிட்டு வர வேண்டும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு : சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பி6, ரிபோப்ளேவின், காப்பர், பொட்டாசியம், போலிக் ஆசிட் போன்ற தசைகளில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது.

பச்சை இலைக் காய்கறிகள் : சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கும் போது, பச்சை இலைக் காய்கறிகளை உணவில் சேர்த்து வர வேண்டும். குறிப்பாக பசலைக்கீரையை சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. மேலும் பச்சை இலைக் காய்கறிகள் பாதிக்கப்பட்ட செல்களை புதுப்பிக்கவும், தசைகளின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.

பருப்பு வகைகள் : பருப்பு வகைகளிலும் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அடிக்கடி பசி ஏற்படுவது குறைந்து, கண்ட கண்ட உணவுகளின் மீது நாட்டம் குறைந்து, ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, தசைகள் நன்கு வளர்ச்சி அடையும்.

பால் பொருட்கள் : பால் பொருட்களான பால், சீஸ் மற்றும் தயிர் போன்றவை தசைகளின் வளர்ச்சிக்கும், எடையை அதிகரிக்கவும் உதவும். மேலும் இது மூட்டு வலி மற்றும் செரிமான பிரச்சனையைத் தடுக்கும்.

ஓட்ஸ்  : ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ள ஓட்ஸை சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கும் போது சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
வேர்க்கடலை வெண்ணெய : சிக்ஸ் பேக் வைக்க நினைப்போர் வேர்க்கடலை வெண்ணெயை டயட்டில் சேர்த்தால், அதில் உள்ள புரோட்டீன், தசைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

தானியம் : தானியங்களை ஜிம் செல்பவர்கள் சேர்த்து வந்தால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, செரிமானம் அதிகரித்து, உடலுக்கு வேண்டிய எனர்ஜி கிடைக்கும். இதனால் உடற்பயிற்சி செய்யும் போது தேவையான ஆற்றல் கிடைக்கும்.

கடல் உணவுகள் : மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. எனவே டயட்டில் மீனை அதிகம் சேர்த்து வந்தால், அவை சிக்ஸ் பேக் வைக்க உதவியாக இருக்கும்.

தோல் நீக்கப்பட்ட இறைச்சி : தோல் நீக்கப்பட்ட இறைச்சியில் தசைகளின் வளர்ச்சிக்கு வேண்டிய புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் இதனை உடற்பயிற்சி செய்து முடித்த பின் சாப்பிடுவது மிகவும் நல்லது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!