எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தேர்வை ஒரு பிரச்சனையாக எண்ணக் கூடாது. மாற்றாக ஒரு சவாலாக ஏற்க வேண்டும். தேர்வை ஒரு சிக்கலாக நினைக்கக்கூடாது. அதை திறமையாக வெளிப்படுத்தக் கிடைத்த ஒரு வாய்ப்பாக கருத வேண்டும். நீங்கள் வருடம் முழுவதும் படிக்கின்றீர்கள். பல செய்திகளைப் புரிந்து கொண்டீர்கள். பகுத்துப் பார்க்கும் ஆற்றலையும் தொகுத்து உணரும் ஆற்றலையும் பெற்றுள்ளீர்கள். இவற்றை உலகிற்கு வெளிப்படுத்த ஒரு வாய்ப்பே தேர்வுகள்.
பல நாட்கள் படித்து உங்களைத் தயார் செய்தீர்கள். அவற்றையெல்லாம் தேர்வில் எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறுவதன் மூலம் மற்றமனிதர்களின் அங்கீகாரம் பெற தேர்வுதான் வாய்ப்பு. நீங்கள் பெறும் மதிப்பெண்களை வைத்தே உங்கள் அறிவை, ஆற்றலை மன ஆற்றலை, திறமையை உலகம் எடை போடுகிறது. எனவே அதிக மதிப்பெண்கள் பெற்று புகழை, அங்கீ காரத்தைப் பெறுங்கள், சந்தோஷம் பெறுங்கள்.
உங்கள் மூளை ஆற்றலை மன ஆற்றலை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது உங்களது படிப்பு ஒரு சாதாரண விஷயம். அத்தனை பாடங் களையும் நன்றாகப் படித்து புரிந்து நினைவில் வைக்கக்கூடிய ஆற்றல் உங்களிடம் இருக்கிறது. அந்த ஆற்றல் முயற்சியால்தான் வெளிவரும். ஆகவே உங்களது மனத்தை மூளையை கல்வியை நோக்கிச் செலுத்தி ஒவ்வொரு நாளும் படித்து வந்தால் நிச்சயமாக உங்களால் அதிக மதிப் பெண்கள் பெறமுடியும். அப்படியிருக்கும் பொழுது ஏன் தேர்வை ஒரு பிரச்சனையாக நினைத்துப் பயப்பட வேண்டும். தேர்வுகள் உங்கள் அறிவுக்கும் திறமைக்கும் முன்னே உள்ள சவால். ஜெயித்துக் காட்டுங்கள்.
தேர்வு பயம், டென்ஷன் நீங்க, இதற்கு கீழ்க்கண்ட பயிற்சி உதவும்.
1. மன ஒத்திகைப் பயிற்சி - ஒத்திகைப் பயிற்சி - செய்யும் முறை
கண்களை மூடி அமைதியாக அமர்ந்து கொள்க. உடலைத் தளர்வாக வைத்துக் கொள்க. மூன்று முறை ஆழ்ந்த சுவாசம் செய்க. இப்பொழுது பின்வரும் செய்திகளை செய்திகளை மனக் காட்சிகளாகப் பார்த்து வரவும்.
இன்று தேர்வு நாள். அதிகாலையில் எழுந்து விடுகிறீர்கள். காலைக் கடன்களை யெல்லாம் முடித்து தியானம் செய்து உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்கிறீர்கள். முக்கியமான பகுதிகளைத் திருப்புதல் செய்து விடுகிறீர்கள். தேர்வு நடக்கும் இடத்திற்கு அரை மணி நேரம் முன்பே சென்று விடுகிறீர்கள். மணி அடித்தபின் உங்கள் இடத்திற்குச் சென்று அமர்கிறீர்கள். விடைத்தாளில் உங்கள் தேர்வு எண்ணைச் சரியாகப் போட்டு காத்திருக்கிறீர்கள். மணி அடிக்கிறது. கேள்வித்தாள் கொடுக்கிறார்கள். அமைதியாகப் படித்துப் பார்க்கிறீர்கள். அதில் மிகவும் நன்றாகத் தெரிந்த ஒரு கேள்வியைத் தேர்வு செய்து பதில் எழுதுகிறீர்கள். இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் உரிய பதிலை மிக நன்றாக எழுதுகிறீர்கள். எழுதி முடித்ததற்குப் பிறகு முறையாக கட்டி திருப்புதல் செய்தபின் காத்திருக்கிறீர்கள். மணி அடித்தவுடன் கொடுத்து விட்டு கம்பீரமாக தேர்வு அறையை விட்டு வெளிவருகிறீர்கள்.
இப்படியாக ஒவ்வொரு தேர்வாக நன்றாக எழுதி முடிக்கிறீர்கள். விடுமுறைக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அதில் நீங்கள் அனைத்துப் பாடங்களிலும் மிக அதிக மதிப் பெண்கள் பெற்றிருப்பதாக அறிவிக்கிறார்கள். அந்தச் சாதனையைப் பார்த்து உங்களை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு கிறார்கள். உங்கள் வீட்டில் பெற்றோர் சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் முதலானோர் பாராட்டுகிறார்கள். தனிமையில் இருக்கும் பொழுது உங்களை நீங்களே பாராட்டிக் கொள்கிறீர்கள். உங்கள் சாதனையை நினைத்து மகிழ்ச்சியடைகிறீர்கள்.
நீங்கள் சாதனையாளர் வெற்றியாளர் உங்களால் முடியும்.
மெதுவாக கண்களைத் திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.
இந்தப் பயிற்சியை ஒரு மூன்று நிமிடங்கள் செய்தாலே போதும். தேர்வு வருவதற்கு சில நாட்கள் முன்னரே ஆரம்பித்து தினமும் ஒரு முறை இந்தப் பயிற்சியை செய்து வருக. இந்த வெற்றிக் காட்சிகள் உள்மனத்தில் பதிந்து வெற்றியைக் கொடுக்கும்.
பொதுவாக எந்தச் செயலைச் செய்ய நாம் பயப்படுகிறோமோ அந்தச் செயலைத் துணிந்து சில முறைசெய்தால் அந்தச் செயல் பற்றிய டென்சன் பயம் நீங்கும் - தன்னம்பிக்கை வளரும்.
அதே போல் தேர்வை நன்றாக எழுது வதைப் போலவும், அதிக மதிப்பெண்கள் பெறு வதைப் போலவும் உள்ள காட்சிகளை அடிக்கடி மனத்திரையில் பார்ப்பதால் உண்மையில் தேர்வை நல்லபடி எழுதினால் என்ன உணர்வுகள் ஏற்படுமோ அதே உணர்வுகளை உள்மனதில் உணர முடியும். அந்த உணர்வுகள் உள் மனதில் பயத்தை போக்கி தன்னம்பிக்கையை வளர்த்து விடும். இந்தப் பயிற்சிக்கு ஆதாரபூர்வமாக மனோ தத்துவ ரீதியிலான விளக்கங்கள் உள்ளன. இச்சிறு பகுதியில் அனைத்து விளக்கங் களையும் தர இயலாது. இந்தப் பயிற்சியைச் செய்யும் பொழுது அதன் பலன் நிச்சயம் உங்களுக்குத் தெரியும்.
தேர்வை எப்படி எழுதுவது, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற சில குறிப்புகள் :
வேகமாக எழுதினாலும் தெளிவாக எழுதுக. முதலில் மிகவும் நன்றாகத் தெரிந்த கேள்விக்கு உரிய விடையை எழுதவும்.
ஏனென்றால் விடைத்தாள் திருத்தும் ஆசிரியருக்கு அப்பொழுதுதான் உங்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் ஏற்படும். ஒவ்வொரு கேள்விக்கும் சரியான வினா என்னைப் போட்டுப் பின் விடை எழுதவும். பதில் எழுதிக் கொண்டு வரும் போது பாதி யில் ஞாபக மறதி ஏற்பட்டால் அதற்கு உரிய இடத்தை விட்டு விட்டு மேலே தொடர்க. யோசிப்பதிலேயே அதிக நேரம் சென்று விட்டால், நன்றாகத் தெரிந்த வினாக்களுக்கு விடையெழுத நேரம் கிடைக்காமல் போய்விடும்.
எல்லாவற்றையும் எழுதியபின் மீண்டும் விட்டுவிட்ட வினாவிற்கான விடையை எழுத முயற்சி செய்க. சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு நினைவுகூர்தல் அந்த வினாவிற்கான பதில் நினைவில் வர வாய்ப்பு உள்ளது.
விடையில் முக்கியமான வரிகளை வார்த்தை களை பென்சிலையோ, பேனாவையோ உபயோகித்து அடிக்கோடு இடவும். இது திருத்துபவரின் கண்ணை ஈர்த்து மதிப்பெண் பெறஉதவும். உங்களுக்கு தெரியாத வினா ஏதேனும் இருந்தால் அதை விட்டுவிடாமல் அதற்குத் தொடர்புடைய பதிலை எழுதவும். ஏனென்றால் நீங்கள் எழுதிய அளவிற்கு திருத்தும் ஆசிரியர் மதிப்பெண் இட வாய்ப்பு உள்ளது. இதைக் கடைசியாக எடுத்து எழுதி வைக்கவும்.
ஒவ்வொரு விடையிலும் அதற்கு அளவுக் குறியீடுகள் இருந்தால் தவறாமல் எழுத வேண்டும். இறுதிமணி அடித்தவுடன் எல்லா விடைத் தாள்களையும் முறையாகத் தொகுத்துக் கட்டி வைக்கவும். பிறகு ஏதேனும் எழுத முடிந்தால் எழுதுக. ஏனென்றால் சிலர் கடைசி நேரம் வரை அவசரமாய் எழுதிவிட்டு சரியாக வரிசைப்படுத்தாமல் விடைத்தாளைக் கட்டிவிட வாய்ப்பு உள்ளது. இதனால் நன்றாக விடை எழுதியும் மதிப்பெண் பெறமுடியாமல் போய்விடும்.
முழு ஆண்டுத் தேர்வு அல்லது அரசுப் பொதுத் தேர்வு எழுதி முடித்தவுடன் நண்பர்களுடன் தேர்வு எழுதி முடித்ததைப் பற்றி விவாதம் செய்ய வேண்டாம். ஏனென் றால் நீங்கள் எழுதியது எழுதியதுதான். அதை மாற்றமுடியாது. வீண் மன உளைச்சல் ஏற்பட்டு அடுத்த தேர்விற்கு தயார் செய்யும் நல்ல மன நிலையை பாதித்து விடும்.
மேற்கண்ட நிரூபிக்கப்பட்ட வழிமுறை களைப் பின்பற்றி தேர்வு எழுதினால் நீங்கள் உயர்வெற்றி பெறுவது உறுதி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2025
13 May 2025 -
அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை : பாகிஸ்தான் அமைச்சர் தகவல்
13 May 2025இஸ்லாமாபாத் : காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை.
-
மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
13 May 2025சென்னை : மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
இந்தியாவுடனான மோதலில் 11 பாக்., வீரர்கள் உயிரிழப்பு
13 May 2025இஸ்லாமாபாத் : மே 7 முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
ரூ.586.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 13 பகுதிகளில் 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு : அமைச்சர் தா. மோ. அன்பரசன் தகவல்
13 May 2025சென்னை : 13 திட்டப்பகுதிகளில் 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ.
-
9 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது: மகளிர் உரிமைத் திட்டத்தில் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்
13 May 2025சென்னை : மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுப்பட்ட பெண்கள் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்.
-
அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்க இந்தியா முடிவு
13 May 2025புதுடெல்லி : அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டி : தமிழக அரசு பெருமிதம்
13 May 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக உள்ளது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து
-
சி.பி.எஸ்.சி 10, 12-ம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
13 May 2025புதுதில்லி : நாடு முழுவதும் 10, 12-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
13 May 2025கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
சி.பி.எஸ்.இ. +2 தேர்வில் 83.39 சதவீதம் பேர் தேர்ச்சி
13 May 2025புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.39 சதவீத மாணவர்க்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்ச்சியில் சென்னை மண்டலம் 4-ம் இடம்
13 May 2025புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
13 May 2025சென்னை : பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 8 பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு: சி.பி.ஐ. வழக்குரைஞர்
13 May 2025கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 ல
-
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை தி.மு.க .முறியடித்தது : தீர்ப்பை வரவேற்று துணை முதல்வர் உதயநிதி பதிவு
13 May 2025சென்னை : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்க தி.மு.க.வே காரணம் என்று பொள்ளாச்சி வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பை வரவேற்று துணை மு
-
அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை : 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
13 May 2025சென்னை : அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தில் திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக
-
பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும்: அன்புமணி
13 May 2025சென்னை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை சிறை என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
-
எங்களுடைய கூட்டணி வலுவாக இருக்கிறது: 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி கூட்டணி தொடரும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில்
13 May 2025சென்னை : எங்களுடைய கூட்டணி வலுவாக, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
சேலம் ஏற்காடு கோடை விழா வரும் 23-ம் தேதி தொடக்கம்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
13 May 2025சேலம், சேலம் ஏற்காடு கோடை விழா வருகின்ற 23ஆம் தேதி துவங்கி 29ஆம் தேதி வரை தொடர்ந்து 7 நாள்கள் நடைபெறும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
-
பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் மோடி திடீர் விசிட் : வீரர்களுடன் கலந்துரையாடி பாராட்டு
13 May 2025புதுடெல்லி : பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் துணிச்சலை பாராட்டினார்.
-
முப்படைத் தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை
13 May 2025புதுடெல்லி, பாதுகாப்புத் துறைச் செயலாளர், முப்படைத் தளபதிகளுடன் நேற்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
-
லிபியா தலைநகரில் கடும் மோதல்: 6 பேர் உயிரிழப்பு
13 May 2025வட ஆப்பிரிக்க, வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் தலைநகர் திரிப்பொலியில் இரண்டு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
-
பாகிஸ்தான் ராணுவத்தின் 51 இடங்களை தாக்கினோம்: பலுசிஸ்தான் விடுதலைப்படை தகவல்
13 May 2025குவெட்டா, பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி பலுசிஸ்தான் விடுதலைப்படை (பிஎல்ஏ) என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக
-
இந்தியாவுடனான மோதலில் 11 பாக்., வீரர்கள் உயிரிழப்பு
13 May 2025இஸ்லாமாபாத் : மே 7 முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு: தமிழ்நாடு தலைவர்கள் கருத்து
13 May 2025சென்னை, தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், 9 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.