முக்கிய செய்திகள்

மலர் மருத்துவத்தின் மகிமை

திங்கட்கிழமை, 4 செப்டம்பர் 2017      மருத்துவ பூமி
flower

Source: provided

உடல் நலம், மனநலம் இவ்விரண்டையும் குணப்படுத்துவது மலர் மருத்துவம் ஆகும். இதன் முன்னோடி டாக்டர் எட்வர்டுபர்ச் ஆவார். இம்மருத்துவத்தின் தாய்நாடு இங்கிலாந்து. 37 மலர்கள் இம்மருத்துவத்தில் அடக்கம்.

இம் மலர் மருத்துவத்தின் வாயிலாக உடல் நோய்கள், மன நோய்கள் மட்டுமின்றி வாழ்க்கைப் பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடிகள், வேலையில்லாத் திண்டாட்டம் குடும்பச் சண்டை சச்சரவுகள், இன மத, சாதி, சமயப் பிணக்குகள், ஆன்மீகச் சந்தேககங்கள், உளவியல் மாறுபாடுகள் போன்றவற்றை எல்லாம் நீக்கலாம். இக்கட்டுரையின் வழி உங்களிடம் நான் பகிர்ந்து கொள்வதின் காரணம் உங்களின் வாழ்க்கை நிலையை உடல் அளவிலும் உள்ள அளவிலும் மாற்றம் வேண்டும் என்பதே.

மலர் மருத்துவம் தோற்றம் :  இலண்டன் காடுகளில் கிடைக்கக்கூடிய மலர்கள், மொட்டுகள் இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் எளிய இயற்கை மருந்து இது. 1886&ல் இங்கிலாந்து நாட்டில் உள்ள மார்யஸ் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த எட்வர்டு பாச் என்பவர் இதன் மகிமையை உணர்ந்து அனுபவித்து வெளிப்படுத்திய உன்னத மலர் மருத்துவம் உலக நாடுகளில் பரவி இன்று வரை இலட்சக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர்.

இயற்கையில் இருந்து பல்வேறு மருந்துகள் வந்துள்ள நிலையில் மலரில் இருந்து பெறப்படும் அபூர்வ சக்திகளைக் கண்டெடுத்து மருந்துகளைத் தயாரித்துள்ளார். இம்மருத்துவம் முற்றிலும் பின் விளைவுகள் அற்ற மருத்துவ முறை எளிமையானது. இதில் அனுபவம் பெற்ற என் போன்ற மருத்துவர்ளால் கொடிய அரிய நோய்களில் இருந்து மக்களை விடுவிக்கலாம். இம்மலர் மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு இந்த 21&ஆம் நூற்றாண்டில் வெளிப்பட வேண்டும்.

எட்வர்டு பாச்  தனக்குப் புற்றுநோய் என்பதையும் குறிப்பிட்ட குறிப்பிட்ட நாளில்தான் இறக்கப்போகிறோம் என்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் மலர்களில் இருந்து பெறப்பட்ட மருந்துகளைக் கண்டறிந்து, அதனைத்தான் முதலில் உண்டு. அதில் வெற்றியும் பெற்றார். பிறகு அவரை அச்சுறுத்திய நோயிலிருந்து விடுபட்டதோடு ஏராளமான நோய்களுக்கு மலர்களைக் கொண்டு மருந்தினைக் கண்டறிந்து உலகம் வளமும், நலமும் பெற தம் பங்களிப்பைத் தந்துள்ளார்.

இன்று உலகமே இம்மருத்துவத்தின் மகிமையை உணர்ந்து பயன்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இந்தியாவிலும் இம்மருத்துவம் காலூன்றி ஏராளமான நோயாளிகளை உடல் அளவிலும் மன அளவிலும் குணப்படுத்தி வருகிறது.
இம்மலர் மருத்துவத்தை என் போன்ற மருத்துவர்கள் கையாள்வதிலும் வெளிப்படுத்துவதிலும் மனநிறைவு ஏற்படுகிறது.

மலர் மருத்துவ வளர்ச்சி :  அபூர்வ மலர்களைக் கண்டறிந்து அதை நீரில் முக்கி, சூரிய கிரகணங்களால் புடமாக்கிப் பெறப்படும் திரவத்தை மருந்தாக மாற்றி பல நோய்களைக் குணப்படுத்தும் மகத்துவம் நிறைந்த மலர் மருந்துகளை நமக்களித்துள்ளார் டாக்டர் எட்வர்டு பாச்.

காரணமும் தீர்வும்: நோய்களுக்கு அடிப்படையே மனம்தான். மனநிலை மாறுபடும்போது உடல்நிலை மாறும். கோபம், பொறாமை, அச்சம், பகை உணர்ச்சி, இவற்றால் வரும் விளைவுகள் உடல் நலத்தைக் கெடுக்கும். இதற்கு மலர் மருத்துவம் தான் உலகில் தலை சிறந்தது.

மலர்களிலிருந்து பெறப்படும் மூலிகைகளைத் திரவமாகவும், மாத்திரைகளாகவும் உட்கொள்ளலாம்.

இம்முறையில் வரும் மருந்துகளை உடனடியாக நோயாளிகளுக்குத் தருவதில்லை. நோயாளிகளின் மனநலம், உடல்நலம் அறிந்து அதற்கேற்ப மருந்துகள் வழங்கப்படும்.
டாக்டர் எட்வர்டு பாச் இந்த அரிய மலர்களிலிருந்து 38 வகையான மருந்துகளைக் கண்டறிந்துள்ளார். நோயாளிகளின் பதட்டத்தைக் கண்டறிந்து அந்நோய்களை வேரோடு களைய இம்மருத்துவம் உதவுகிறது. அதுவே இம்மருத்துவத்தின் வெற்றியும்கூட.
கருவுற்ற பெண்கள், குழந்தைகள் மனநோய்கள் எனப் பாகுபாடின்றி இம்மருத்துவம் கைகொடுக்கும். மரபு நோய்கள், எதிர்பாராத நோய்கள் நாட்பட்ட நோய்கள் என இவற்றை எல்லாம் குணப்படுத்துவது மலர் மருத்துவத்தின் தனித் தன்மையாகும்.

மலர் மருத்துவத்தின் பரிணாமம்

1. ரெஸ்க்யூ ரெமடி (Rescue Remedy) எனப்படும் ஐந்து மலர்களை கொண்ட மூலிகை மருந்து மன அதிர்ச்சி, அச்சம், எதிர்கால சிந்தனை, வலி, எரிச்சல், மன அமைதியின்மையைப் போக்கும்.

2. அக்ரிமணி (Agri mony) எனப்படும் மலர் மருத்துவ சோர்வு, மன உளைச்சல், குடிப்போர், தற்கொலைக்கு முயற்சி செய்வோர் போன்றோர்க்கு நன்மருந்து.

3. ஆஸப்பென் (Aspen)  எனும் மருந்து நல் உறக்கத்திற்கும், பீச் (Beech) எனும் மலர் மருந்து சகிப்புத் தன்மை அற்றவர்களுக்கும் செண்ட்டாரி (Centetaury) எனும் மலர் மருந்து அடிமை உணர்வு, குற்ற உணர்வு உடையோர்க்கும் சிறந்த மருந்து, செராட்டோ (Cerato) சந்தேகிப்பவர்க்கு சிறந்த நிவாரணி, செரிப்ளம் (Cherry Plum) எனும் மலர் மருந்து உடல் உபாதை, மன உபாதையைப் போக்கும். செஸ்ட் நட்பட் (Chestnut Bud) எனும் மலர் மருந்து திரும்ப திரும்ப தவறு செய்பவர்களை மாற்ற வல்லது. சிக்கரி (Chicory) எனும் மருந்து சுயநல எண்ணத்தை மாற்றும் க்ளெமாட்டிஸ் (Clematis) எனும் மருந்து மறதி, கனவு குறைபாடு உள்ளவர்க்குப் பொருந்தும். கிராப் ஆப்பிள் (Crab Apple) எனும் மருந்து உடலைச் சுத்திகரிக்கும். எலீம் (Elm) எனும் மருந்து மன நிலையை மாற்றி துணிச்சல் தரும்.

இதுபோன்று 38 வகை மருந்துகள் மனிதர்களின் பல்வேறு உடல், மன நோய்களைப் போக்குகின்றன. முதலுதவியும் மலர் மருத்துவமும் : டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா போன்ற வைக்கும் இம்மலர் மருத்துவம் பயனுடையது. இம்மலர் மருந்துகளை முதலுதவிப் பெட்டி போல எங்கம் கொண்டு செல்லலாம். வெட்டுக்காயம், தீக்காயம் போன்ற சுவடே இல்லாமல் குணம் செய்யும். பேய், பிசாசு, பில்லி, சூன்யம், பாம்புகடி தேள்கடி போன்றவற்றிறகும் போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவர்களையும் எளிதில் குணப்படுத்தும். விபத்து காலங்களில் உற்ற துணையாய் இருந்து உயிர் காக்கவும் உதவுகின்றன மலர் மருந்துகள்.

தேடுபவன் அடைகிறான், உணர்பவன் அனுபவிக்கிறான் தன்னைப் பற்றிய அறிவுதான் பேரறிவு, இம்மலர் மருத்துவம் இவ்வறிவினைத் தருவதோடு மனநலம், உடல் நலம் சிறக்க வழிவகை செய்கிறது. இனிவரும் காலங்களில் இம்மலர் மருத்துவம்  உன்னதமானது என்பதை உணர இக்கட்டுரை வழிவகை செய்யும். சூழ்நிலை மனிதனை மாற்றும். மலர் மருத்துவம் சூழ்நிலையையே மாற்றி மனிதனிடம் மனிதத்தை மலரச் செய்யும்.

மலர் மருத்துவத்தின் உண்மை நிலை :  இந்தியாவில் இல்லாத மலர்களா? இங்குள்ள மலர்களில் இல்லாத மருத்துவ குணமா! இதற்கு ஏன் இங்கிலாந்து செல்ல வேண்டும். என்றெல்லாம் கேள்விக்கனைகள் நம்மில் பலருக்கு எழுகிறது. இதற்கு நான்தரும் பதில் என்னவென்றால், இந்தியாவில் உள்ள மலர்களுக்கும் இம்மகத்துவம் உண்டு. ஆனால், இம்மலர்களை ஆய்வு செய்து, பல ஆண்டுகள் முறையாக இதன் தன்மைகளை உணர்ந்து வெளிப்படுத்தியுள்ளார். எட்வர்டுபர்ச். ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட மலர்களையுடைய நம்நாட்டில் இதுபோன்ற முறையான ஆராய்ச்சிகள் நடைபெறவில்லை என்பதும் முறையாக மலர்களின் நன்மைகள் வெளிப்படுத்தப்படவில்லை என்பதும்தான் நாம் உணர வேண்டியது.

டாக்டர். கௌரிதாமோதரன், எம்.எஸ்.சி.,பி.எச்.டி.,
உளவியல் நிபுணர்,
மலர் மருத்துவம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து