முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் தாலுகாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 60ஆயிரம் பேருக்கு விலையில்லா வேஷ்டி,சேலைகள் தயார்:

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருமங்கலம் தாலுகாவைச் சேர்ந்த பயனாளிகள் 60ஆயிரம் பேருக்கு வழங்கிடுவதற்காக தமிழக அரசின் சார்பில் விலையில்லா வேஷ்டி சேலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு  தமிழகத்திலுள்ள பயனாளிகள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விலையில்லா வேஷ்டி,சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது.தற்போது 2018-ம் ஆண்டு பொங்கல்பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலுள்ள ஏழை,எளிய மக்கள் பயன் பெற்றிடும் வகையில் விலையில்லா வேஷ்டி சேலைகளை வழங்கிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.அதன்படி மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவைச் சேர்ந்த பயனாளிகள் 59554ஆயிரம் பேருக்கு விலையில்லா வேஷ்டி,சேலைகள் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்து லாரிகள் மூலமாக விலையில்லா வேஷ்டி சேலை பண்டல்கள் கொண்டு வரப்பட்டு திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளது. இதையடுத்து பொங்கல் பண்டிகைக்கு முன்கூட்டியே திருமங்கலம் தாலுகாவிலுள்ள பயனாளிகள் அனைவருக்கும் விலையில்லா வேஷ்டிகள் வழங்கப் படவுள்ளது.அதன்படி மதுரை மாவட்டத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்களால் விலையில்லா வேஷ்டி சேலைகள் வழங்கிடும் திட்டம் மிகவிரைவில் தொடங்கி வைக்கப்;படுகிறது.இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் ஆலோசனையின்படி திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சிறப்புடன் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து