முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்: கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக மாவட்ட மன்ற கூடத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

குறைதீர்வு நாள் கூட்டம்

இந்த கூட்டத்திற்கு கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குநர் அரக்குமார், தாசில்தார் ஆர்.ரவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆத்மா உறுப்பினரும் விவசாய உற்பத்தியாளர் குழு தலைவருமான எம்.சேகர் பேசும்போது தனிநபர் கழிவறை இல்லாத வீடுகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் நாயுடுமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்க விவசாயிகளை வரவழைத்து அலைக்கழிக்கப்படுகின்றனர். துரிஞ்சாபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜா மருத்துவமனைக்கு சரியாக வருவதில்லை அடிக்கடி முகாம் செல்வதாகவும் கூறிவிட்டு செல்கின்றார். ஆனால் பொதுமக்கள் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படுவதில்லை என வலியுறுத்தினார்.

இதேபோல தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு முறையாக கடன் வழங்கப்படுவதில்லை. மேலும் வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு இடுபொருள், உரங்கள், தரமான விதைகள் வழங்குவதில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்து பேசிய கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி விவசாயிகளின் கோரிக்கைகள் துறை அதிகாரிகள் மூலம் நிறைவேற்றி தரப்படும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து