சென்னை, அ.தி.மு.க. கூட்டணியில் தென்காசி தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாகக் கூறிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தற்போது தான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாகக் கூறி உள்ளார்.
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் கிருஷ்ணசாமி இணைந்தார். தென்காசி தொகுதி அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அப்போது, தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக கிருஷ்ணசாமி அறிவித்தார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தென்காசி மக்களவைத் தொகுதியில் நான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இருக்கிறேன். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக வருவார் என்று தெரிவித்தார்.