முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆல் இங்கிலாந்து ஓபன் போட்டி: காலிறுதியில் சிந்து தோல்வி

சனிக்கிழமை, 14 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : 2020-ம் ஆண்டுக்கான ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, உலகின் நான்காம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நொசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, முதல் செட்டை 21-12 என்ற கணக்கில் கைப்பற்றி ஒகுஹாராவிற்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் சிறப்பாக விளையாடிய ஒகுஹாரா 21-15 என்ற கணக்கில் கைப்பற்றி ஆட்டத்தில் சமநிலையை ஏற்படுத்தினார். பின் ஆட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை 13-21 என்ற கணக்கில் கைப்பற்றி சிந்துவை வீழ்த்தினார். இதன் மூலம் ஜப்பானின் ஒகுஹாரா 12-21, 21-15, 21-13 என்ற செட் கணக்குகளில் சிந்துவை வீழ்த்தி ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து