முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு 3 வேளையும் புரத சத்துமிக்க அறுசுவை உணவு : முதல்வருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் மதுரையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு 3 வேளையும் புரத சத்துமிக்க அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் பலரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 

பசியை தாங்கிக் கொள்ளும் சக்தி பெரியதுதான். ஆனால் அதை விடப் பெரியது பசி உள்ள ஒருவருக்கு உணவளிப்பது தான். ராமாயணத்தில் அன்னதான மகிமையை குறித்து இடம் பெற்றுள்ளதாவது, வசிஷ்டர் சொன்னதின் பேரில் ரிஷயசிருங்க முனிவரை வைத்து புத்திர பாக்கியம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகத்தை தசரத மகா சக்கரவர்த்தி செய்கிறார்.

ஆனால் யாகம் பூர்த்தியாகாமல் இருந்து வந்த நிலையில் அப்போது வயதான ஒரு முதியவர் கடும் பசியால் தசரத மக்களிடம் ஐயா நான் பசியுடன் உள்ளேன். எனக்கு உணவு தாருங்கள் என்று கேட்ட போது அப்போது தனக்கு இருந்த உணவை கொடுத்து அவரை பசியார செய்தார். அப்பொழுது அந்த முதியவர் ஐயா எனது வயிறு நிரம்பி விட்டது உன் எண்ணம் ஈடேறுக என்று கூறினார்.

இதை பார்த்த வசிஷ்டர் மன்னனைப் பார்த்து புன்னகையுடன் மன்னா இந்த யாகத்தால் உனக்கு புத்திர பாக்கியம் கிடைக்காவிட்டாலும் நீ செய்த அன்னதானத்தால் நிச்சயம் கிடைக்கும் என்று கூறினார். வசிஷ்ட முனிவரே அன்னதான பலனை பற்றி அப்போதைய கூறியுள்ளார். சங்க இலக்கியங்களில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று கூறுவார்கள். இதன் உண்மையான பழமொழி என்றால் மற்றொருவருக்கு உணவு அளிக்க முந்த வேண்டும். தனக்கு உணவு படைக்க பிந்த வேண்டும் என்ற அர்த்தமாகும். எம்.ஜி.ஆர். முதல் அம்மா வரை தற்போது தமிழக மக்களை காத்து வரும் நமது முதல்வரும் அன்னதானங்களை வழங்கி எளிய, ஏழை மக்களின் இதயங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

அதிலும் தற்போது உள்ள இந்த தொற்றுநோய் காலத்திலும் அம்மா உணவகங்கள் மூலம் நாள்தோறும் 7 லட்சம் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லாமல் உணவு வழங்குவது மட்டுமல்லாது, தற்போது கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் தமிழகம் முழுவதும் உணவு வழங்கி வரும் அதே வேளையில் அதற்கு மேலும் மெருகூட்டும் வகையில் ஒரு முன்மாதிரியாய் அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் மதுரை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளுக்கு மூன்று வேளையும் சுடச்சுட ஆரோக்கியமான முறையில் புரதம் நிறைந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து இந்த திட்டத்தை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். சரவணன், பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. தமிழரசன், கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் சங்குமணி, அம்மா சேரிடபில் டிரஸ்ட் செயலாளர் யு.பிரியதர்ஷினி இயக்குனர் யு.தனலட்சுமி தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், அம்மா பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் பங்கேற்றனர். இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது, 

மதுரை மாவட்டத்தில் மதுரை ராஜாஜி மருத்துவமனை,தோப்பூர் அரசு மருத்துவமனை, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மதுரை விவசாய கல்லூரி ஆகிய இடங்களில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நான்கு இடங்களிலும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவுகளும், அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு பழச்சாறுடன் பாசிபருப்பு மாலை 4 மணிக்கு சூப் வகைகளுடன் சுண்டல் ஆகியவை இந்த கொரோனா தொற்றுநோய் முடியும்வரை வழங்கப்படுகிறது.

தற்பொழுது  அம்மா பேரவையுடன், அம்மா சேரிடபில் டிரஸ்ட் இணைந்து கொரோனா தொற்று நோய் சிகிச்சை பெறுவோருக்கு மூன்று வேளையும் சரியான நேரத்தில் சுகாதாரத்துடன் மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு உணவு கூடத்தில் 50 சமையல் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தினந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். மூன்று வேளைகளும் கிருமிநாசினி தெளிக்கப்படும். அதேபோல் அவர்களுக்கு தலையில் அணியும் உறை, முகக் கவசங்கள், கையுறை ஆகியவை வழங்கப்படுகின்றன.

கொரானாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் பாதுகாப்பு அரண் மைத்து பல்வேறு சீரிய நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார். முதல்வரின் நடவடிக்கையால் தான் தமிழகத்தில் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜூலை மாதம் வரை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க தாயுள்ளத்தோடு முதல்வர் உத்தரவு வழங்கியுள்ளார். மதுரையில் 21 தனிமைப்படுத்துதல் முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதும் கொரானாவுக்கு சிகிச்சையளிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழக மக்களின் நம்பிக்கையை முதல்வர் பெற்று வருகிறார். அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் உழைத்து வருகிறோம் என்று கூறினார். 

கொரானா வார்டில் பணிபுரியும் மருத்துவர் கூறியதாவது; பொதுவாக ஒரு நோயாளி அதிக அளவில் மருந்துகள் உட்கொள்ளும் போது சரியான முறையில் உணவு எடுத்துக் கொண்டால் தான் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். தற்போது முதலமைச்சர் ஆணைக்கிணங்க அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில் இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை நாங்களும் சோதனை செய்தோம். மிகவும் நன்றாக உள்ளது என்று கூறினார். 

ரமேஷ் என்பவர் கூறியதாவது,  நான் தோப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இங்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சுடச்சுட உணவு தக்க நேரத்தில் வழங்குகிறார்கள். குறிப்பாக முதல்வர் ஆணைக்கிணங்க அம்மா பேரவை சார்பில் வழங்கப்படும் உணவு மிகவும் ருசியாக எங்கள் இல்லங்களில் சமைப்பது போல் உள்ளது.

உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பதைப்போல் இன்றைக்கு தக்க மருத்துவ வசதிகள் செய்து கொடுத்து உயிரை காப்பாற்றி, வயிற்றுக்கு வயிறார உணவையும் வழங்கி வரும் தாயுமானவராக திகழ்ந்து வரும் முதல்வருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார் 

ராணி என்ற பெண்மணி கூறியதாவது நான் அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரானா சிகிச்சை பெற்று வருகிறேன். வெளியில் சமைக்கும் உணவு எனக்கு ஒவ்வாமை ஏற்படும். தற்போது முதல்வர் ஆணைக்கிணங்க வீட்டு சமையலை போல் மூன்று வேளையும் சுடச்சுட உணவு வழங்கப்பட்டு வருகிறது.

காலையில் பழச்சாறுகளும், மாலையில் காய்கறி சூப் வகைகளும் இத்துடன் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. எங்களைப்போன்ற ஏழை, எளிய மக்களுக்கு இதுபோன்ற உபசரிப்பு வரப்பிரசாதமாகும். எங்களின் ரத்த உறவுகளை போல் பாசத்துடன் எங்களை காத்து வரும் முதல்வருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து