முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 ஆண்டுகளுக்கும் குறைவாக சேவை புரிந்துள்ள ராணுவப்படை ஊழியர்களுக்கும் இயலாதவர்களுக்கான ஓய்வூதியம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்

வியாழக்கிழமை, 16 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

பத்து ஆண்டு காலத்திற்கும் குறைவாக சேவை புரிந்த ராணுவப் படை பணியாளர்களுக்கும் இயலாதவர்களுக்கான ஓய்வூதியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக, 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலத்திற்கு பணியாற்றியவர்களுக்கு மட்டுமே இயலாதவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

இயலாமை காரணமாக ராணுவ சேவையை விட்டு வெளியேறும் ராணுவப் படை பணியாளர்களுக்கு இயலாதவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இது ராணுவ சேவையின் காரணமாக நேரிட்ட அல்லது மோசமாகி விட்ட இயலாமை அல்ல, ஏற்றுக் கொள்ளப்படும் இயலாமையாகும். இந்த ஓய்வூதியத் திட்டத்திற்குப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். 4.1.2019 தேதியன்று அல்லது அதற்குப் பிறகு ராணுவ படைப் பிரிவில் உள்ள மற்றும் பணியாற்றிய பணியாளர்களுக்கு இந்த நன்மை கிடைக்கும்.

முன்னதாக, 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலத்திற்கு பணியாற்றியவர்களுக்கு மட்டுமே இயலாதவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.  10 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் பணியாற்றியவர்களுக்கு இயலாதவர்களுக்கான கிராஜுவிட்டி தொகை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ராணுவச் சேவை காரணமாக அல்லாமல் பிற உடல் நோய் அல்லது மனநோய் காரணமாக ராணுவப் படைப்பிரிவில் இருந்து வெளியேறும் ராணுவப்படைப் பணியாளர்களுக்கு, அவர்கள் 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் பணியாற்றி இருந்தாலும், அவர்களுக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப்படும். ராணுவச் சேவையிலும் இனி பணிபுரிய முடியாது. வேறு மறு வேலைவாய்ப்பிலும் ஈடுபட முடியாது என்ற அளவிற்கு பாதிக்கப்பட்ட ராணுவப்படை பணியாளர்கள் இதனால் பயன்பெறுவார்கள். பொருளாதார ரீதியாகவும் அவர்கள் பலனடைவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து