மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா

ஞாயிற்றுக்கிழமை, 2 ஆகஸ்ட் 2020      இந்தியா
amit-shah 2020 08 02

Source: provided

புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே உறுதிப்படுத்தியுள்ளார். 

இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளைப் பெற்றவுடன், நான் சோதனை செய்ய முடிவெடுத்தேன். மிக லேசான அறிகுறி இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதியானது. நான் நலமுடன் இருக்கிறேன். ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட நீங்கள் அனைவரும் தயவு செய்து உங்களை தனிமைப்படுத்தி கொள்ளவும் என்று அவர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பா.ஜ.க.வினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக பொய்யான செய்திகள் வெளியானது. அப்போது இந்த வதந்திகளை அமித்ஷா மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து