மாநிலங்களவையில் 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு: வெங்கையா

புதன்கிழமை, 23 செப்டம்பர் 2020      இந்தியா
Venkaiah-Naidu 2020 09 23

Source: provided

புதுடெல்லி : பதவிக் காலம் முடிவடைய இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு, அவைத்தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேரின் பதவிக்காலம் நவம்பர் மாதம் நிறைவடைய உள்ளது. அவர்களின் பெயர்களை மாநிலங்களவையில் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நேற்று அறிவித்து அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.  

அப்போது அவர் பேசும்போது, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த நமது சக உறுப்பினர்களான சத்ரபால் சிங் யாதவ், ஜாவேத் அலி கான், பிஎல் புனியா, ரவி பிரகாஷ் வர்மா, ராஜா ராம், ராம் கோபால் யாதவ், வீர் சிங், ஹர்தீப் சிங் புரி, நீரஜ் சேகர், அருண் சிங், ராஜ் பப்பர் ஆகியோர் நவம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளனர். 

ஓய்வுபெறும் உறுப்பினர்கள், நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து பொது வாழ்வில் சேவை செய்ய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உறுப்பினர்கள் பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவர்கள் களைப்பு அடைவதில்லை. ஓய்வுபெறும் உறுப்பினர்கள் தொடர்ந்து மக்களுக்காக சேவை செய்து, ஜனநாயகத்தை வலுப்படுத்துவார்கள் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து