முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்பத்திரியில் இருந்து ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் டிஸ்சார்ஜ்

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020      உலகம்
Image Unavailable

ரஷ்ய அதிபர் புடினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி, விமான பயணத்தின் போது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் கோமா நிலைக்கு சென்றார். அலெக்சி நவால்னியை கொலை செய்ய அவர் குடித்த டீயில் விஷம் கலந்திருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர். மேலும், ரஷ்யாவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டால் புடின் அரசால் அவரது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று ஜெர்மனி அழைத்துச் செல்லப்பட்டு தலைநகர் பெர்லினில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அலெக்சி நவால்னி கடந்த சில தினங்களுக்கு முன்பு கோமாவில் இருந்து மீண்டார். அதன் பின்னர் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது உடல் நிலை முழுமையாக தேறியதை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆஸ்பத்திரி நிர்வாகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. இதனிடையே அலெக்சி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறி வரும் ஜெர்மனி இது தொடர்பாக வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்த ரஷ்யாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து