முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீமானுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

சனிக்கிழமை, 8 நவம்பர் 2025      தமிழகம்
Kamal 2023-09-19

Source: provided

சென்னை : சீமானின் கொள்கையில் பிடிவாதம் வியத்தலுக்குரியவை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சீமானுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;-

எப்போதும் அண்மையில் இருக்கும் இளைய சகோதரர் சீமான், பிறந்த பிரதேசமானாலும் சரி, தேர்ந்துகொண்ட திரைத்துறையானாலும் சரி பக்கத்திலேயே பயணம் செய்பவர். பின்பற்றும் கொள்கையில் இவர் காட்டும் பிடிமானமும் பிடிவாதமும் வியத்தலுக்குரியவை. தான் தோன்றுவது எந்த அரங்காக இருந்தாலும் அதில் புகழொடு தோன்றும் பண்பும் திறனும் மிக்க அன்புத் தம்பி, நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான் அவர்களுக்கு நேற்று பிறந்தநாள். இந்நாளில் அவரை அணைத்து வாழ்த்துவது எனக்கு மகிழ்ச்சி. நீடு வாழ்க இளவல். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து