முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து

புதன்கிழமை, 11 நவம்பர் 2020      அரசியல்
Image Unavailable

பீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தி பொறுப்பு அல்ல என்று ராஷ்டீரிய ஜனதா தளம் அவருக்கு சாதகமாக கருத்து தெரிவித்துள்ளது.

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று அதிகாலை அறிவிக்கப்பட்டன, இது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மகிழ்ச்சியான வெற்றியைக் கொடுத்துள்ளது. 

243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 75 இடங்களில் வெற்றி பெற்று ராஷ்டீரிய ஜனதா தளம் மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்து உள்ளது. இருந்தாலும் பாரதீய ஜனதாவின் 74 இடங்களும் ஐக்கிய ஜனதா தளத்தின் 43 இடங்களுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைக்கிறது. 

கடந்த 2015 சட்டசபை தேர்தலில் 71 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனதா தளம் இந்த முறை 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. ராஷ்டீரிய ஜனதா தளம்- காங்கிரசின் மெகா கூட்டணி 110 இடங்களை பெற்று உள்ளது 

முதலமைச்சர் நிதீஷ் குமார் நான்காவது முறையாக முதல் அமைச்சர் பதவி ஏற்க உள்ளார்.தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டீரிய ஜனதா தளம் சட்டமன்றத்தில் மிக அதிக உறுப்பினர்களை கொண்ட தனிக்கட்சியாக இருக்கும். 

பீகார் தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தளம் 23.03% வாக்குகளையும், அதைத் தொடர்ந்து பா.ஜனதா 19.5% வாக்குகளையும் ஐக்கிய ஜனதா தளம் 15.4% வாக்குகளையும் காங்கிரஸ் 9.5% வாக்குகளையும் பெற்று உள்ளது. 

இது குறித்து ராஷ்டீரிய ஜனதா தலைவர் நிர்மல்குமார் கூறிய போது பீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல்காந்தி பொறுப்பு அல்ல நாங்கள் எங்கள் கூட்டாளிகளுக்கு ஆதரவாக நிற்போம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து