எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சிவகங்கை : அம்மா அரசு மேற்கொண்ட கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் நல்ல பலன் கிடைத்துள்ளது என்று சிவகங்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக இந்நோய்த் தொற்றுப் பரவல் தமிழ்நாட்டில் படிப்படியாகக் குறைந்து வருகிறது. மாவட்ட நிர்வாகமும், மக்கள் நல்வாழ்வுத் துறையும் சிறப்பாக செயல்பட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இந்நோய் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தியுள்ளது. இந்நோய் பரவல் குறைந்திருந்தாலும், மருத்துவ வல்லுநர்கள் மீண்டும் இது அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது என்றும், மழைக் காலமாக இருக்கின்ற காரணத்தினால் மேலும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்ற கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்கள். எனவே, மாவட்ட நிர்வாகத்திற்கும், சுகாதாரத் துறைக்கும் மற்றும் பல்வேறு துறைகளுக்கும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்நோய்ப் பரவல் குறைந்து வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில், இந்நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவமனைகளும், படுக்கை வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான மருந்துகளும், உபகரணங்களும் கையிருப்பில் தயார் நிலையில் உள்ளன. எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், மக்கள் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.
இது ஒரு தொற்று நோய். ஆகவே, இயல்பு நிலை திரும்புவதற்கு அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்தாலும், பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டுமென்று மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இம்மாவட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. காவேரி குடிநீர் கிடைக்கப்பெறாத சிவகங்கை மாவட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. சிவகங்கை மாவட்ட மக்களுக்காக மாபெரும் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். சிவகங்கை மாவட்டத்திற்கு காவேரி குடிநீர் கிடைக்காமல் விடுபட்ட 11 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட 2,459 ஊரகக் குடியிருப்புகளும், 8 பேரூராட்சிகளும், 3 நகராட்சிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பொருட்டு சேர்க்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு அம்மாவின் அரசால் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. சிவகங்கை நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் நிலையிலுள்ளது. தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. குடிமராமத்துத் திட்டத்தைப் பொறுத்தவரை, 2016-2017 முதல் 2019-2020 வரை 236 கண்மாய்கள் தூர்வாரப்பட்டதில் 35,566 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட உப்பாற்றை சமப்படுத்துதல் மற்றும் அதன் குறுக்குக் கட்டுமானங்கள் புனரமைக்கும் பணி ரூபாய் 14.50 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு 7,454 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. . சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடச் சாலைத் திட்டத்தின் கீழ் மேலூர்-திருப்பத்தூர் சாலையில் 16.26 கி.மீ சாலையை அகலப்படுத்தி மேம்படுத்துதல் மற்றும் 2.66 கி.மீ. நீளம் திருப்பத்தூருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு ரூபாய் 110 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்பந்தம் இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன, விரைவில் பணி துவங்கப்படும். திருப்பத்தூர் ஆலங்குடி சாலை, மாத்தூர் முளக்குளம் சாலை, அரண்மனை சிறுவயல் சாலையில் ரூபாய் 20.16 கோடி மதிப்பீட்டில் 3 உயர்மட்டப் பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 100-லிருந்து 150-ஆக உயர்த்த அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ மாணவர்களின் பட்ட மேற்படிப்பிற்காக முதுநிலை மருத்துவ மேற்படிப்புகள் தொடங்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 65 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 66 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டு மாணவ, மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2020-21ஆம் ஆண்டில் 35 ஊராட்சிகளிலுள்ள 53 குக்கிராமங்களில் 4,231 வீடுகளுக்கு ரூபாய் 8.85 கோடி மதிப்பீட்டில் வீடுகளுக்கான செயல்படக்கூடிய குடிநீர் இணைப்பு வழங்கிடும் பணிகளில் தற்போது வரை 749 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, எஞ்சிய வீடுகளுக்கு இணைப்புகள் வழங்குவதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும். 2016-2017, 2018-2019 மற்றும் 2019-2020 ஆண்டுகளில் சிவகங்கை மாவட்டத்தில் வறட்சி மற்றும் மழையால் ஏற்பட்ட பயிர்ச்சேதத்திற்கு 96,109 விவசாயிகளுக்கு ரூபாய் 82.5 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிட மக்களுக்கு கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு நன்மைகள் அம்மாவின் அரசு மூலமாக கிடைக்கப் பெற்றிருக்கிறது. சிவகங்கை பையூர், முல்லைவாயல் கிராமங்களில் ரூபாய் 55.40 கோடி மதிப்பீட்டில் 608 வீடுகள் அடங்கிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளன. புதிய கால்நடை நிலையங்கள் கட்டுவதற்கு ரூபாய் 10.7 கோடி மதிப்பீட்டில் செயலாக்கம் செய்ய அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் தேர்வு நிலை பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூபாய் 3.30 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலூர், அகரம் மற்றும் கொந்தகை ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் மேற்கொள்ளவுள்ள ஆறாம் கட்ட தொல்லியல் அகழ்வாராய்ச்சி மூலம் தமிழர்களின் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான, தொன்மையான நாகரிகத்தை, பண்பாட்டை உலகறியச் செய்ய தமிழ்நாடு அரசால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு, பல்வேறு திட்டங்கள் இம்மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க அனைத்து வகைகளிலும் அரசால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்நோய்ப் பரவல் மேலும் படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலை திரும்ப அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
'மோந்தா' புயலுக்கு அடுத்து வரும் புயலுக்கு பெயர் என்ன தெரியுமா?
27 Oct 2025சென்னை, மோந்தா புயலுக்கு அடுத்து வரும் புயலின் பெயர் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
தங்கம் விலை சரிவு
27 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-10-2025.
27 Oct 2025 -
தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கவே வாய்ப்பு : ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
27 Oct 2025சிவகங்கை : தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைக்க வாய்ப்புள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
நாட்டின் ஒற்றுமைக்காக - தமிழகத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க.வும்-காங்கிரசும் இன்று ஒரே அணியில் பயணிக்கிறது: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Oct 2025சென்னை, தி.மு.க.வும் காங்கிரஸ் பேரியக்கமும் கடந்த காலங்களில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் ஒற
-
கரூர் நெரிசல் சம்பவ வழக்கை தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை, கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 3 வாரத்துக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
27 Oct 2025சென்னை : தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் என்று உலகச் செயல்முறை மருத்துவ நாளையொட்டி முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பைசன் படத்தை பாராட்டிய தமிழக முதல்வர்
27 Oct 2025தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பைசன் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
-
ஜிடி நாயுடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
27 Oct 2025மாதவன் நடிப்பில் உருவாகி வரும் ஜிடி நாயுடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
-
ராஜ் B. ஷெட்டி நடிக்கும் ஜுகாரி கிராஸ்
27 Oct 2025பிரபல இயக்குநர் குருதத்த கனிகா, ராஜ் B. ஷெட்டியுடன் இணைந்து, ஒரு புதிய படத்தை சமீபத்தில் துவங்கியுள்ளார்.
-
ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை கடக்கும் மோந்தா புயல்
27 Oct 2025சென்னை : ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை மோந்தா புயல் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
துணை ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை
27 Oct 2025திருப்பூர் : துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழகம் வருகிறார்.
-
குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன்: கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்கள் குடும்பத்தினரிடம் விஜய் உறுதி
27 Oct 2025சென்னை : குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்று கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்களின் குடும்பத்தினரிடம் த.வெ.க. தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
-
இந்தவாரம் வெளியாகும் ஆர்யன்
27 Oct 2025விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்கும் படம் ஆர
-
தடை அதை உடை படத்தின் இசை வெளியீட்டு விழா
27 Oct 2025காந்திமதி பிக்சர்ஸ் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்கி ’அங்காடித்தெரு’ மகேஷ் மற்றும் குணா பாபு நடிக்கும் படம் தடை அதை உடை.
-
டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள்: சி.பி.ஐ.க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் யோசனை
27 Oct 2025சென்னை, டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
மீண்டும் பிரமாண்ட படத்தில் நடிக்கும் பிரபாஸ்
27 Oct 2025மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி சீரிஸ் வழங்கும் பான் இந்தியா படம் ஃபௌசி.
-
மராட்டியத்தில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் திருப்பம்
27 Oct 2025மும்பை, மராட்டியத்தில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
-
கரூர் சம்பவத்தில் முன்ஜாமீன் மனுவை புஸ்ஸி ஆனந்த் வாபஸ் பெற்றதால் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
27 Oct 2025சென்னை : கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி த.வெ.க.
-
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க சூர்யகாந்த் பெயர் பரிந்துரை
27 Oct 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்ய காந்தை நியமிக்க, சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.
-
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 இடங்களில் நிவாரண மையங்கள்: தமிழ்நாடு அரசு
27 Oct 2025சென்னை, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 இடங்களில் மழை வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கரூர் சம்பவம்: ஆதவ் அர்ஜுனா மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்
27 Oct 2025சென்னை : கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சர்வையானதையடுத்து அவரது மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
2-ம் கட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் வரும் நவ. 4-ல் தொடக்கம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வரும் நவம்பர் 4-ம் தேதி மேற்க
-
மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள்: கருணாஸ் பரபரப்பு பேச்சு
27 Oct 2025சிவகங்கை, மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள் என்று கருணாஸ் பேசினார்.
-
கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்: ஆண் குழந்தையை ரூ. 50 ஆயிரத்திற்கு விற்க முயன்ற தந்தை உள்ளிட்ட 3 பேர்
27 Oct 2025கோட்டயம், கேரளாவில் 2½ மாத ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்க முயற்சித்த தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


